For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பில்லியன் சியர்ஸ் ஜெர்சி.. இந்திய அணியின் டி 20 உலகக் கோப்பை ஜெர்சியில் இப்படி ஒரு சிறப்பம்சமா.. செம

சென்னை: உலகக் கோப்பை தொடருக்கான இந்திய னியின் புதிய டி 20 ஜெர்சி இன்று வெளியிடப்பட்டது.

ஐபிஎல் 2021 தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஐபிஎல் தொடர் முடிந்து ஒரு வாரத்திலேயே உலகக் கோப்பை டி 20 போட்டிகள் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 5 ஓவரில் 4 விக்கெட்.. 13 ஓவர்களுக்கு நோ பவுண்டரி.. ராஜஸ்தானை சல்லி சல்லியாய் நொறுக்கிய மும்பை! 5 ஓவரில் 4 விக்கெட்.. 13 ஓவர்களுக்கு நோ பவுண்டரி.. ராஜஸ்தானை சல்லி சல்லியாய் நொறுக்கிய மும்பை!

இன்று இந்திய அணியில் அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு ஷரத்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் வெங்கடேஷ் ஐயர், அவேஷ் கான் போன்ற வீரர்கள் நெட் பவுலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜெர்சி

ஜெர்சி

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அனுவின் புதிய டி 20 ஜெர்சி இன்று வெளியிடப்பட்டது. அடர் நீல நிறத்தில் புதிய ஜெர்சி வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த டி 20 தொடரில் இந்தியா ரெட்ரோ ஜெர்சியை பயன்படுத்தியது. இந்த ஜெர்சி பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

நீல நிறம்

நீல நிறம்

இந்திய அணியின் பழைய அடர் நீல நிற ஜெர்சியில் சில மாற்றங்கள் செய்து களமிறக்கி இருந்தனர். ஆனாலும் இந்த நீல ஜெர்சியில் சில ஸ்பான்சர் லோகோ உள்ளிட்ட அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு விமர்சனங்களை சந்தித்தது. இதைத்தான் தற்போது சரி செய்துள்ளனர். ஜெர்சியின் அடர் நீல நிறத்தை கொஞ்சம் குறைத்துள்ளனர்.

மாற்றம்

இங்க் ப்ளூ நிறத்தில் புதிய ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ ஜெர்சியில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதோடு மிக முக்கியமாக ஜெர்சியின் முன் பக்கத்தில் இதய துடிப்புகள் போல இசிஜி வடிவத்தில் கோடுகள் போடப்பட்டுள்ளது. ஜெர்சியின் மையத்தில் இந்த கோடுகள் போடப்பட்டுள்ளது.

மில்லியன்

இது இந்திய அணிக்கு பல பில்லியன் மக்கள் கொடுக்கும் ஆதரவை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பில்லியன் சியர்ஸ் ஜெர்சி என்று இது அழைக்கப்படுகிறது. பல பில்லியன் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்த வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த ஜெர்சியின் சிறப்பம்சம்.

அர்த்தம்

அர்த்தம்

இன்று பிசிசிஐ மூலம் இன்று ஜெர்சி வெளியிடப்பட்டது. இந்திய அணியின் ஸ்பான்சரான பைஜூஸ் மற்றும் கிட் ஸ்பான்சரான எம்பிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் லோகோ இதில் இடம்பெற்றுள்ளது. இந்த முறை லோகோ அளவு கொஞ்சம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெர்சிக்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

Story first published: Wednesday, October 13, 2021, 22:29 [IST]
Other articles published on Oct 13, 2021
English summary
BCCI revealed the new jersey for T20 World Cup of team India today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X