For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி உங்களுக்கு அந்த வேலை கிடையாது... பேசாம உட்காருங்க..! வீரர்கள் தேர்வில் அதிரடி காட்டிய பிசிசிஐ

Recommended Video

BCCI New Rules | வீரர்கள் தேர்வில் அதிரடி காட்டிய பிசிசிஐ- வீடியோ

மும்பை : வீரர்களை தேர்வு செய்ய தேர்வுக் குழுக் கூட்டத்தை இனிமேல் பிசிசிஐ செயலாளர் கூட்ட கூடாது, தேர்வுக் குழுத் தலைவரே கூட்டுவார் என்று பிசிசிஐ சிஓஏ அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு தொடரிலும் பங்கேற்கும் போது, அதற்கான வீரர்களை தேர்வு செய்ய, தேர்வுக்குழு கூட்டம் நடைபெறும். அதன் முடிவில், அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் என்று அறிவிக்கப்படும். இதுவரை பிசிசிஐயின் செயலாளர் தான் தேர்வுக் குழு கூட்டத்தை கூட்டுவது வழக்கம்.

ஆனால், இனி வருங்காலங்களில் இத்தகைய நடைமுறை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, தேர்வுக் குழுத் தலைவரே கூட்டத்தை கூட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை பிசிசிஐ செயலாளரே தேர்வுக் குழுக் கூட்டத்தை கூட்டுவது வழக்கம்.

சச்சினுக்கு கிடைத்த உயரிய கௌரவம்.. கிரிக்கெட்டில் இன்னொரு மணி மகுடம்.. தாமதிக்காத ஐசிசி! சச்சினுக்கு கிடைத்த உயரிய கௌரவம்.. கிரிக்கெட்டில் இன்னொரு மணி மகுடம்.. தாமதிக்காத ஐசிசி!

தலையீடு என புகார்

தலையீடு என புகார்

அந்த முறை மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது புதிய சட்ட வரையறை வகுக்கப்பட்ட பின்னரும் பிசிசிஐ செயலாளரே தேர்வு விவகாரத்தில் தலையீடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிரடியாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

தலைவருக்கு அதிகாரம்

தலைவருக்கு அதிகாரம்

தற்போது தேர்வுக் குழு தலைவருக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும், வீரர்கள் தேர்வில் செயலாளர் தலையீடு இல்லாத வகையிலும் நீதிபதி லோதா குழு பரிந்துரை அடிப்படையிலும் பிசிசிஐ சிஓஏ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி இனி, செயலாளர் எந்த தேர்வுக் குழு கூட்டத்தை கூட்டவோ அதில் பங்கேற்கவோ முடியாது.

லோதா குழு பரிந்துரை

லோதா குழு பரிந்துரை

மேலும் வீரர்கள் மாற்றத்துக்காக அவரது ஒப்புதலும் இனி தேவையில்லை. நீதிபதி லோதா குழு தெளிவாக அளித்த பரிந்துரைகளின் படி வீரர்கள் தேர்வு, கிரிக்கெட் விவகாரங்கள் கிரிக்கெட் தொடர்புடையவர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

வெளிநாடுகளில் கூட்டம்

வெளிநாடுகளில் கூட்டம்

வெளிநாடுகளில் கூட்டத்தை கூட்டவோ அல்லது அணிகளை அறிவிக்கவோ, நிர்வாக மேலாளருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. தேர்வுக் குழுக் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் அல்லது சிஓஏ பங்கேற்க கூடாது.

மெயில் அனுப்ப ஏற்பாடு

மெயில் அனுப்ப ஏற்பாடு

முன்பு தேர்வு குழு பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக செயலாளருக்கு மெயில் அனுப்புவது வழக்கம். அதை ரத்து செய்து, இனிமேல், பயணத்துக்கோ அல்லது கூட்டம் கூட்டவோ சிஇஓவுக்கு மெயில் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, July 19, 2019, 11:35 [IST]
Other articles published on Jul 19, 2019
English summary
Bcci secretary will not convene selection committee meeting
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X