For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இசை வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கொள்ளை கொண்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ்

மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தான் கிரிக்கெட்டில் மட்டுமின்றி இசைத்துறையிலும் திறமை மிக்கவர் என்பதை தற்போது நிரூபித்துள்ளார்.

தன்னுடைய கைகளில் கிடார் வகையை சேர்ந்த உக்குலேலே என்ற சிறிய வகை கிடாரை கொண்டு இசையமைத்த ஜெமிமா மேலும் பாலிவுட் பாடல்களையும் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

BCCI shares musical video of Jemimah Rodrigues

இந்த மாஷ்-அப் வீடியோவை தனது டிவிட்டர் தளத்தில் பகிர்ந்த பிசிசிஐ, ஞாயிற்றுக்கிழமை காலையை மனதை மயக்கும் பாடல்களுடன் துவங்குங்கள் என்று கேப்னுடன் அந்த வீடியோவை வெளியிட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத அங்கமாக விளங்கிவரும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ளார். இந்நிலையில், அவரது மற்ற திறமைகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அவ்ளோ நேரம்லாம் வெயிட் பண்ண முடியாது.. 17 பந்தில் 36 ரன்.. தனி ஆளாக மேட்ச்சை முடித்த ஷாலோ!அவ்ளோ நேரம்லாம் வெயிட் பண்ண முடியாது.. 17 பந்தில் 36 ரன்.. தனி ஆளாக மேட்ச்சை முடித்த ஷாலோ!

இளம் விராங்கனையான அவர், இந்த சிறிய வயதிலேயே, கிடார் வகையை சேர்ந்த உக்குலேலே என்ற சிறிய வகை கிடாரை கொண்டு இசையமைக்கிறார். மேலும் இந்த இசையுடன் பாலிவுட் படப் பாடல்களையும் பாடி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். 'ஆஜ் கல் தேரே மேரே', 'ஹாய் அப்னா தில்', 'யே தோஸ்தி ஹம் நஹின்' போன்ற பாடல்களை அவர் பாடியது காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிசிசிஐ, ஞாயிறு காலையை மனதை மயக்கும் இசை மற்றும் பாடல்களுடன் துவக்குங்கள் என்ற கேப்ஷனையும் வெளியிட்டுள்ளது.

Story first published: Sunday, May 24, 2020, 19:45 [IST]
Other articles published on May 24, 2020
English summary
BCCI Shares Jemimah Rodrigues Musical Video in Twitter
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X