For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகளிர் அணியின் முரட்டுத்தனமான ஜிம் பயிற்சி... பிசிசிஐ வெளியிட்ட வீடியோ... விமர்சனங்களுக்கு பதிலடி!

மும்பை: இந்திய மகளிர் அணி மற்றும் பிசிசிஐ-க்கும் இடையே பிரச்னைகள் நிலவி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் பிசிசிஐ ஒற்றை ட்வீட்டால் பதிலடி கொடுத்துள்ளது.

இந்திய மகளிர் அணி விவகாரங்களில் பிசிசிஐ பாரபட்சம் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக வழுத்து வருகிறது.

இன்னும் இரண்டே நாளில்.. பிசிசிஐ இன்னும் இரண்டே நாளில்.. பிசிசிஐ

முதலில் போட்டி தொடர்கள் சரியாக ஏற்படுத்தி தரவில்லை என்ற புகார் எழுந்த நிலையில் தற்போது ஊதிய பிரச்னையில் வந்து நின்றுள்ளது.

தொடர் குற்றச்சாட்டு

தொடர் குற்றச்சாட்டு

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டி வரை சென்றது. ஆனால் அதற்கான பரிசுத்தொகை இன்னும் இந்திய வீராங்கனைகளுக்கு கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே சமீபத்தில் மகளிர் அணிக்காக ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டது. இதில் ஆடவர் அணியை விட மகளிர் அணிக்கு மிகக்குறைவாக ஊதியம் கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் பரவி வந்தன.

பிசிசிஐ பபுள்

பிசிசிஐ பபுள்

இந்நிலையில் அனைத்து குற்றாச்சாட்டுக்களுக்கும் பிசிசிஐ ஒற்றை ட்வீட்டால் பதில் அளித்துள்ளது. இந்திய மகளிர் அணி அடுத்ததாக வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக பிசிசிஐ சார்பில் மும்பையில் 8 நாட்கள் குவாரண்டை பபுள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் வீராங்கனைகள் நுழைந்துவிட்டனர்.

ஒற்றை ட்வீட்

ஒற்றை ட்வீட்

மும்பையில் உள்ள பிசிசிஐ பபுளில் இருக்கும் வீராங்கனைகள் ஜிம்மில் கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நோக்கி இளம் வீராங்கனை முதல் சீனியர் வீராங்கனை வரை கடும் பயிற்சியில் இருக்கும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மேலும் அதற்கான கேப்ஷனில், 'அனைத்து சத்தங்களையும் அடக்குங்கள்... நாங்கள் இந்தியா' என தேசிக்கொடியுடன் ஒற்றுமையை குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

வரும் ஜூன் 2ம் தேதி ஆடவர் அணியுடன் தனி விமானம் மூலம் இங்கிலாந்து பறக்கும் இந்திய மகளிர் அணி, அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக ஜூன் 16ம் தேதி முதல் ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஜுலை 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Story first published: Thursday, May 27, 2021, 17:09 [IST]
Other articles published on May 27, 2021
English summary
BCCI shares strong Video message of women’s team gearing up for England series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X