For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முக்கிய பயிற்சியாளர் அதிரடி நீக்கம்.. இந்திய அணியின் மெகா முடிவு.. அடுத்து வீரர்கள் தான் - விவரம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து அடுத்தக்கட்டமாக முக்கிய நபர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் மோசமான தோல்வியுடன் நடையை கட்டியது.

இந்த தோல்வியால் விரக்தியடைந்த இந்திய ரசிகர்கள், காரணமான அனைவரையும் நீக்கி, புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

சூர்யகுமாருக்கு வாய்ப்பு தராமல், 3 உலககோப்பையை மிஸ் பண்ணிட்டோம்.. கிரிக்கெட் விமர்சகர் நாணி கருத்துசூர்யகுமாருக்கு வாய்ப்பு தராமல், 3 உலககோப்பையை மிஸ் பண்ணிட்டோம்.. கிரிக்கெட் விமர்சகர் நாணி கருத்து

பிசிசிஐ-ன் நடவடிக்கை

பிசிசிஐ-ன் நடவடிக்கை

அதன் ஒரு பகுதியாக பிசிசிஐ-ம் நடவடிக்கையை எடுத்தது. சேட்டன் சர்மா தலைமையிலான இந்திய தேர்வுக்குழுவை ஒட்டுமொத்தமாக நீக்கி அதிரடி காட்டியது. மேலும் புதிதாக தேர்வுக்குழுவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், செய்யலாம் எனவும் அறிவிப்பை வெளியிட்டது. இதே போல ஹர்திக் பாண்ட்யாவை டி20 கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

பயிற்சியாளர் நீக்கம்

பயிற்சியாளர் நீக்கம்

இந்நிலையில் பயிற்சியாளர்கள் குழுவிலும் கைவைத்துள்ளது. இந்திய அணியின் வீரர்கள் மனநல மேம்பாட்டு பயிற்சியாளர் பேடி அப்டன் இனி தொடரமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. பேடி அப்டனின் பணி காலம் டி20 உலகக்கோப்பையுடன் நிறைவுக்கு வந்தது. அவரின் ஒப்பந்தத்தை புதுப்பிக்கலாமா? என்ற ஆலோசனை நடந்த போது, தேவையில்லை, அவர் செல்லட்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோலிக்கு செய்த உதவி

கோலிக்கு செய்த உதவி

2 ஆண்டுகளுக்கும் மேலாக மன அழுத்தத்தில் இருந்து வந்த விராட் கோலி, பேடி அப்டனின் பயிற்சியினால் தான் அட்டகாசமான கம்பேக்கை கொடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுலும் தற்போது அவரிடம் தான் தயாராகி வந்தார். ஆனால் இனி அவரின் உதவி இந்திய அணிக்கு இருக்காது எனத் தெரியவந்துள்ளது.

அடுத்து வீரர்கள் தான்

அடுத்து வீரர்கள் தான்

தேர்வுக்குழு, பயிற்சியாளர் என கைவைத்த பிசிசிஐ அடுத்ததாக வீரர்களிடம் தான் வரவுள்ளது. இந்திய அணியில் சீனியர் வீரர்களாக உள்ள ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, தினேஷ் கார்த்திக், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்களை டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற கூறிவிட்டு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே விளையாட அறிவுறுத்தவுள்ளது. இளம் வீரர்களை கொண்ட டி20 படை உருவாக்கப்படவுள்ளது.

Story first published: Saturday, November 26, 2022, 11:50 [IST]
Other articles published on Nov 26, 2022
English summary
BCCI sacked another important person in in Team India, Next step is senior players
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X