For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இனியும் பொறுத்துக்க முடியாது” ரோகித்-க்கு பிசிசிஐ எச்சரிக்கை.. இன்னும் 5 டெஸ்களில் பெட்டிய கட்டுங்க

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள சூழலில் ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ-ல் இருந்து எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அணி வீரர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் பிப்ரவரி 9ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இரு அணிகளுமே பயிற்சி போட்டிகளை ரத்து செய்துவிட்ட சூழலில், தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

ரோகித்திற்கு பெரிய சம்பவம் இருக்கு.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் பயிற்சியாளர் சுவாரஸ்ய தகவல்! ரோகித்திற்கு பெரிய சம்பவம் இருக்கு.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் பயிற்சியாளர் சுவாரஸ்ய தகவல்!

பிசிசிஐ தந்த எச்சரிக்கை

பிசிசிஐ தந்த எச்சரிக்கை

இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ எச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது. அதாவது ரோகித் சர்மா தனது கேப்டன்சி திறமையை நிரூபிக்க 5 டெஸ்ட் போட்டிகளை கொடுப்பதாகவும், அவற்றின் முடிவுகளை வைத்தே அவரை வைத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பது முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அவசர முடிவுக்கு காரணமும் உண்டும்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அதாவது கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை நழுவ விட்டுள்ளது. 2 டி20 உலகக்கோப்பை மற்றும் ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை. இதுமட்டுமல்லாமல் ஆசிய கோப்பையிலும் தோல்வி முகத்தையே பெற்றது. 2013ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஐசிசி கோப்பையாவது வெல்ல மாட்டோமா? என்ற ரசிகர்களின் ஏக்கம் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூலமாவது நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு இந்த ஆஸ்திரேலிய தொடர் தான் பங்கு வகிக்கப்போகிறது.

எப்படி சாத்தியம்?

எப்படி சாத்தியம்?

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகளில் 2 - 0 அல்லது 3 - 1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றால் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். இறுதி சுற்றிலும் ஆஸ்திரேலிய அணியை தான் எதிர்கொள்ளும். அதிலும் வெற்றி கண்டால் தான் ஐசிசி கோப்பையை ஏந்துவார்கள். எனவே இந்த 5 போட்டியும் தான் அவரின் கேப்டன்சியை தீர்மானிக்கும், இனி ஒரு தோல்வியை தாங்க முடியாது என பிசிசிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நேரமே கொடுக்கல

நேரமே கொடுக்கல

இது ஒருபுறம் இருக்க, ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியை வழிநடத்தும் வாய்ப்பே சரிவர கிடைக்கவில்லை. அவர் பதவியேற்று ஒரு வருடம் ஆகிவிட்ட போதும் 2 போட்டிகளில் மட்டுமே வழிநடத்தியுள்ளார். காயம் காரணமாக பல போட்டிகளை தவறவிட்டார். கேப்டன்சி செய்த இலங்கையுடனான 2 போட்டிகளில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள், 238 ரன்கள் வித்தியாசங்களில் வெற்றியை தேடி தந்துள்ளார். இதனால் போதுமான காலம் இல்லாமல் அவருக்கு நெருக்கடி கொடுப்பது தவறு என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, February 6, 2023, 10:11 [IST]
Other articles published on Feb 6, 2023
English summary
Rohit sharma's Captaincy future will decide by the Next 5 matches with australia, BCCI sents the huge warning to the team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X