For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன் பதவிக்கும் ஆபத்து,,!!- அவசர ஆலோசனையில் ஈடுபட்ட கங்குலி, ஜெய்ஷா

மும்பை: இந்திய கிரிக்கெட்டுக்கு கடந்த 2 வாரமாகவே போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும்.

Recommended Video

Furious Kapil Dev lashes out at Kohli, Ganguly for ‘talking badly about each other in public

விராட் கோலியை ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியை விட்டு நீக்கியதில் இருந்தே இந்த பிரச்சினை தொடர்கிறது.

“30 நாளில் ரூ.50 ஆயிரம் கோடி வருமானம்” சைலண்டாக காய் நகர்த்தும் சவுரவ் கங்குலி.. எப்படி தெரியுமா? “30 நாளில் ரூ.50 ஆயிரம் கோடி வருமானம்” சைலண்டாக காய் நகர்த்தும் சவுரவ் கங்குலி.. எப்படி தெரியுமா?

தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்திற்கு முன்பு விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் அது பிரச்சினையை முடிப்பதற்கு பதில் வளர்த்து வட்டது.

அவசர ஆலோசனை

அவசர ஆலோசனை

கங்குலி தம்மிடம் கேப்டன் பதவியை விட வேண்டாம் என்று சொல்லவில்லை என விராட் கோலி கூற, பிரச்சினை தற்போது கங்குலி, விராட் கோலிக்கும் இடையே திரும்பியது. விராட் கோலியின் இந்த பேட்டி கங்குலிக்கு தர்மசங்கடத்தை தந்துள்ளது.இதனிடையே, விராட் கோலியின் பேட்டி குறித்து , பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலியும், ஜெய்ஷாவும் அவசரமாக காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பதவி நீக்கம்

பதவி நீக்கம்

இதில் விராட் கோலி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என விவாதிக்கப்பட்டது. அப்போது, விராட் கோலி தொடர்ந்து பிரச்சினைகளை வளர்க்கும் விதமாக பேசி வருவதாகவும், பி.சி,சி.ஐ.யின் விதிமுறைகளை மீறி வருவதாகவும் ஜெய்ஷா கூறியதாக தெரிகிறது. இதனால் விராட் கோலிக்கு இனி எவ்வித கேப்டன் பதவியையும் தர கூடாது என ஜெய்ஷா கூறியதாக தெரிகிறது

கங்குலி பிளான்

கங்குலி பிளான்

அதற்கு கங்குலி, இப்போது நடவடிக்கை எடுத்தால் பிரச்சினை பெரிதாகி விடும் என்பதால், தற்போது அமைதி காத்துவிட்டு தென்னாப்பிரிக்கா தொடருக்கு பிறகு முடிவு எடுக்கலாம் என்று கூறியுள்ளார். அதற்கு ஜெய்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் விராட் கோலிக்கு தென்னாப்பிரிக்கா தொடர் அக்னி பரீட்சையாக மாறிவிட்டது.

அக்னி பரீட்சை

அக்னி பரீட்சை

ஒரு வேலை, இந்த தொடரில் விராட் கோலி அணி தேர்வில் தவறு செய்தாலோ, அல்லது பயிற்சியாளர் டிராவிட்டுடன் மோதலில் ஈடுபட்டாலோ இல்லை தொடரை இழந்தாலோ, அவரது டெஸ்ட் கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. இதனால், விராட் கோலிக்கு தென்னாப்பிரிக்க தொடர் வாழ்வா சாவா என்ற தொடராக அமைந்துள்ளது.

Story first published: Friday, December 17, 2021, 17:34 [IST]
Other articles published on Dec 17, 2021
English summary
BCCI Top Leaders Ganguly and Jay shah discusses about Virat kohli Test captaincy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X