For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலிக்கு நோ ஸ்பெஷல் கவனிப்பு.. எல்லோருக்கும் இனி ஒரே மரியாதைதான்.. பிசிசிஐ எடுக்கும் முடிவு

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி இல்லாமல் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கும் உரிய முக்கியத்துவத்தை அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. தொடரில் இந்தியா வாஷ் அவுட் ஆகிவிடும் எனறு பலரும் தப்புக்கணக்கு போட்ட நிலையில் இந்திய அணி வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது.

அதிலும் கோலி, பும்ரா, ஷமி, ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா போன்ற மூத்த வீரர்கள் பலர் காயம் அடைந்த நிலையிலும் வலிமையான ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியது.

 வீழ்த்தியது

வீழ்த்தியது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி இல்லாமல் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கும் உரிய முக்கியத்துவத்தை அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் இதுவரை கோலிக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. கோலி சொல்வதே அணிக்குள் வேத வாக்காக இருந்தது.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

பயிற்சியாளர் ரவி சாஸ்திரியாக இருந்தாலும் கோலி எடுக்கும் முடிவே எப்போதும் இறுதியானதாக இருக்கும். அணியின் தேர்விலும் கோலி எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும். ஆனால் இனி அணியில் கோலிக்கு சமமான மதிப்பு மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

குறைவான மதிப்பு

குறைவான மதிப்பு

கோலி இல்லாமலே இந்திய அணி வென்றுவிட்டது. இந்திய அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட வகையில் உலகத்தரமான வீரர்கள். எல்லோருக்கும் அணியின் நுணுக்கம் தெரிந்துள்ளது. கோலி, ராகுல், ரஹானே, ரோஹித் என்று கேப்டனாகும் தகுதி கொண்ட பலர் அணியில் உள்ளனர்.

எல்லோருக்கும் மரியாதை

எல்லோருக்கும் மரியாதை

எல்லோருக்கும் முழு மரியாதை கொடுக்க வேண்டும். எல்லோரும் தனிப்பட்ட வகையில் கடினமாக உழைக்கிறார்கள் என்பதால் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. வரும் இங்கிலாந்து தொடரில் வீரர்களை ஒரே மாதிரி நடத்தும் எண்ணத்தில் பிசிசிஐ இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Thursday, January 21, 2021, 18:38 [IST]
Other articles published on Jan 21, 2021
English summary
BCCI will give equal treatment to the players inside the team India, No special treatment for Kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X