For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லோருக்கும் அழைப்பு.. ஆனா அந்த சீனியருக்கு மட்டும் கல்தா.. பிசிசிஐ அதிரடி முடிவு.. கசிந்த தகவல்!

மும்பை : இந்திய அணி வீரர்கள் அடுத்து வரும் மாதங்களில் கிரிக்கெட் தொடர்களுக்கு தங்களை தயார் செய்து கொள்ள உள்ளதாக பிசிசிஐ வட்டாரம் கூறி வருகிறது.

அடுத்த கட்டமாக மூன்று மாதங்களாக வீட்டில் முடங்கி இருந்த இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடத்த உள்ளது பிசிசிஐ.

பொதுவாக பயிற்சி முகாம்களில் ஒப்பந்த வீரர்கள் மட்டுமின்றி அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ள அத்தனை வீரர்களும் இடம் பெறுவார்கள்.

உலகத்திலேயே இவரை விட பெஸ்ட் பீல்டர் யாருமே இல்லை.. புகழ்ந்து தள்ளிய கௌதம் கம்பீர்!உலகத்திலேயே இவரை விட பெஸ்ட் பீல்டர் யாருமே இல்லை.. புகழ்ந்து தள்ளிய கௌதம் கம்பீர்!

அழைப்பு இருக்காது

அழைப்பு இருக்காது

ஆனால், இந்த முறை பிசிசிஐ நடத்த உள்ள பயிற்சி முகாமில் மூத்த வீரர் தோனிக்கு அழைப்பு இருக்காது என கூறப்படுகிறது. இது பெரும் விவாதமாக மாறி உள்ளது. முன்னாள் வீரர்கள் பலர் தோனி அணியில் இடம் பெறாவிட்டாலும் கூட பயிற்சி முகாமில் இடம் பெற வேண்டும் என கூறி உள்ளனர்.

டி20 உலகக்கோப்பை ஆர்வம்

டி20 உலகக்கோப்பை ஆர்வம்

தோனி கடந்த ஓராண்டாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனினும், டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் விளையாட ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் 2020 ஐபிஎல் தொடரில் ஆட தன்னை தயார் செய்து வந்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. அத்துடன் தோனியின் கிரிக்கெட் எதிர்காலமும் கேள்விக் குறி ஆகி உள்ளது. அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் தன் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

பயிற்சி இல்லாத வீரர்கள்

பயிற்சி இல்லாத வீரர்கள்

மறுபுறம், இந்திய அணி வீரர்கள் கடந்த மூன்று மாதங்களாக களத்தில் பயிற்சி மேற்கொள்ளவில்லை. இந்திய அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

மேலும், அதற்கு முன் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு பெரிய தொடர்களுக்கு முன் இந்திய வீரர்கள் நீண்ட கால பயற்சியில் ஈடுபடுவது அவசியம். அதை கருத்தில் கொண்டு அடுத்த மாதம் ஆறு வார பயிற்சி முகாமை பிசிசிஐ நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

அழைப்பு விடுக்க வேண்டும்

அழைப்பு விடுக்க வேண்டும்

அந்த பயிற்சி முகாமுக்கு பிசிசிஐ ஒப்பந்தம் பெற்ற இந்திய அணி வீரர்கள், மட்டுமின்றி இளம் வீரர்கள் பலரும், அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ள வீரர்களும் அழைக்கப்படுவர். தோனி டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட விரும்பும் பட்சத்தில் அவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

ஆனால், இதில் தோனி அழைக்கப்பட மாட்டார் என பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது. தோனி ஓராண்டாக இந்திய அணியில் ஆடாத நிலையில் அவருக்கு அழைப்பு விடுக்க வாய்ப்பு இல்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

முன்னாள் வீரர்கள் கருத்து

முன்னாள் வீரர்கள் கருத்து

முன்னாள் வீரர்கள் நெஹ்ரா, தீப் தாஸ்குப்தா போன்றோர் தோனியையும் பயிற்சி முகாமுக்கு அழைக்க வேண்டும் என கூறியுள்ளனர், தோனி அணியில் ஆடுகிறாரா, இல்லையா என்பதைத் தாண்டி இது இலன் விக்கெட் கீப்பர்கள், பேட்ஸ்மேன்களுக்கு கற்றுக் கொள்ள பெரிய வாய்ப்பாக இருக்கும் என கூறி உள்ளனர்.

ஐபிஎல் அணிகள்

ஐபிஎல் அணிகள்

எனினும், கொரோனா வைரஸ் காரணமாக இந்த பயிற்சி முகாம் திட்டமிட்ட படி நடத்த முடியவில்லை என்றால் ஐபிஎல் அணிகள் நடத்த உள்ள பயிற்சி முகாம்களில் மட்டுமே இந்திய வீரர்கள் பங்கேற்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

Story first published: Saturday, June 20, 2020, 17:40 [IST]
Other articles published on Jun 20, 2020
English summary
BCCI won’t pick Dhoni for Team India practice camp post lockdown, though some former players wanted him to be included.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X