இதுங்களும் சதி பண்ணுதே.. தேசிய கீதத்தின் போது கடுப்பான இஷான் கிஷான்.. சுவாரஸ்ய வீடியோ!

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தேசிய கீதம் பாடும் போது செய்த விஷயம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

India அணியின் கேப்டன் Rohit Sharma ODI Cricket விமர்சனம் பற்றி பதிலடி *Cricket

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகள் இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்.. முழு விவரம் இதோ.. ஆஸி உடன் இத்தனை முறையா?அடுத்த 2 ஆண்டுகள் இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்.. முழு விவரம் இதோ.. ஆஸி உடன் இத்தனை முறையா?

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு சுருண்டது. தீபக் சஹார் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோரின் வேகத்தில் சிக்கிய அந்த அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோரே ஆட்டத்தை முடித்துவிட்டனர்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

ஷிகர் தவான் 113 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 81 ரன்களை சேர்த்தார். சுப்மன் கில் 72 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என 82 ரன்களை குவித்தார். இதன் மூலம் 3போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வீடியோ

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக இரு அணி வீரர்களும் தங்களது தேசிய கீதத்தை பாடி மரியாதை செலுத்துவார்கள். அந்தவகையில் நேற்று இந்திய வீரர்கள் பாடிக்கொண்டிருந்த போது இஷான் கிஷானை மட்டும் குளவி ஒன்று தொந்தரவு செய்துக்கொண்டே இருந்தது. முகத்தின் மீது அமர்ந்துக்கொண்டிருந்த போதும் அவர் பதற்றமின்றி பாடிக்கொண்டே இருந்தார். ஆனால் திடீரென குளவி அவரது காதுக்குள் செல்ல முயன்றது.

பின்னர் என்ன ஆனது

பின்னர் என்ன ஆனது

நீண்ட நேரம் பொறுமை காத்த இஷான் கிஷான், தேசிய கீதம் பாடுவதையும் நிறுத்திவிட்டு, அந்த குளவியை விரட்ட தொடங்கிவிட்டார். பின்னர் யாருக்கும் தெரியாமல் மீண்டும் தனது இடத்திற்கு வந்துவிட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Bee Attacks ishan kishan while singing National Anthem in IND vs ZIM 1st ODI
Story first published: Friday, August 19, 2022, 15:36 [IST]
Other articles published on Aug 19, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X