For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசி.யில் பிறந்து, நியூசி.க்கு எதிராக இங்கிலாந்தை சாம்பியன் ஆக்கிய பென் ஸ்டோக்ஸ்.. சுவாரசிய கதை

லார்ட்ஸ்: நியூசிலாந்தில் பிறந்து, பின்னர் இங்கிலாந்து அணியில் இடம்பெற்று, அதே நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை பைனலில் கோப்பையை பெற காரணமாக இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? அந்த வீரரின் பெயர் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்தின் உலக கோப்பை கனவை நனவாக்கியவர்.

லார்ட்சில் நடைபெற்ற உலக கோப்பை பைனல் இன்னும் பல காலம் பேசப்படும். அதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஓவரும், அதன் பின்னர் நடைபெற்ற சம்பவங்களும் தான். சூப்பர் ஓவரை சந்திக்க பேர்ஸ்டோ அல்லது ஜேசன் ராய் களமிறங்குவர் என்று எதிர்பார்த்த நிலையில், பட்லருடன் ஸ்டோக்ஸ் வந்தார்.

அவரது கடந்தகால கிரிக்கெட் வரலாற்றின் ராசி, அவரது செயல்பாடுகள் காரணமாக அவரால் சாதிக்க முடியுமா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டது. ஆனாலும், இங்கிலாந்தின் 44 ஆண்டுகால உலக கோப்பை கனவு நிறைவேற்றி இருக்கிறார் ஸ்டோக்ஸ். தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை முதல் முறையாக முத்தமிட்டிருக்கிறது இங்கிலாந்து.

யார் உலக சாம்பியன்?

யார் உலக சாம்பியன்?

ஆனால் பலரது மனங்களும் நியூசிலாந்து தான் வென்றதாக சொல்லி வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்ல உலகின் புகழ் பெற்ற பல கிரிக்கெட் வீரர்களும் இதையே தான் சொல்கின்றனர். காரணம் 50 ஓவர்கள் முடிவில் டை, சூப்பர் ஓவரிலும் டை. ஐசிசி விதிகளின்படி இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

12 வயதில் இங்கிலாந்து

12 வயதில் இங்கிலாந்து

சரி... யார் இந்த பென் ஸ்டோக்ஸ் என்று பார்த்தால் பெரும் ஆச்சரியங்கள் அதில் காத்திருக்கின்றன. 28 வயதான அவரின் முழு பெயர் பெஞ்சமின் ஆண்ட்ரூ பென் ஸ்டோக்ஸ். பிறந்தது நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட் சர்ச்சில். 12வது வயதில் குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறினார்.

தந்தை ஒரு கோச்

தந்தை ஒரு கோச்

ஸ்டோக்ஸின் தந்தை ஜெரார்டு ஸ்டோக்ஸ் நியூசிலாந்து ரக்பி அணிக்காகவும், ஸ்டோக்ஸின் தாய் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடியவர். தந்தை ஜெரார்டு, இங்கிலாந்து ரக்பி அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் இங்கிலாந்தில் குடியேறினார்.

எப்படி கிடைத்தது வாய்ப்பு?

எப்படி கிடைத்தது வாய்ப்பு?

அதன் பின்னர் இங்கிலாந்தில் முதல்தர போட்டிகளால் விளையாட ஸ்டோக்சுக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திய அவர், 2011ம் ஆண்டு முதல்முறையாக இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றாலும், 2013ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் ஸ்டோக்ஸ். பிளின்டாப்புக்கு பிறகு இங்கிலாந்தின் ஆல்ரவுண்டராக வர்ணிக்கப்பட்டார்.

இரட்டை சத வரலாறு

இரட்டை சத வரலாறு

காரணம், இதே நியூசிலாந்துக்கு எதிராக 2015ல் இதே லார்ட்சில் டெஸ்ட் போட்டியில் 85 பந்துகளில் சதமடித்து ஆச்சரியப்படுத்தினார். அதே ஆண்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 163 பந்துகளில் ஸ்டோக்ஸ் எடுத்த இரட்டைசதம்தான் இன்றும், இங்கிலாந்து வீரர் ஒருவர் எடுத்த அதி வேக இரட்டைசதம் ஆகும்.

தொடரும் சர்ச்சை

தொடரும் சர்ச்சை

தொடர்ந்து தமது சிறப்பான ஆட்டத்திறனால் ஐபிஎல் போட்டிகளில் மிக அதிக விலையில் ஏலம் எடுக்கப்பட்டார். 2017 ஐபிஎல்லில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக 14.2 கோடி ரூபாயில் ஏலம் போனார். புகழ்பெற்ற வீரர் என்றாலும் அவரும் சுற்றி சர்ச்சைகளும் இருக்கவே செய்கின்றன.

கைது, விடுவிப்பு

கைது, விடுவிப்பு

2017ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த ஒரு போட்டிக்கு பிறகு இரவு விடுதி ஒன்றில் 2 பேரை தாக்கியதாக ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டார். 2016ம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதி போட்டி தோல்விக்கு பிறகு ஸ்டோக்ஸ் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப் பட்டன.

44 ஆண்டுகாலம்

44 ஆண்டுகாலம்

ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பையில் அவற்றை தூக்கி எறிந்திருக்கிறார் ஸ்டோக்ஸ். இங்கிலாந்தின் 44 ஆண்டுகால உலக கோப்பை கனவை நிறைவேற்றி இருக்கிறார். அவரின் உணர்வு பூர்வமான விளையாட்டு, இந்த அளவுக்கு உயர்த்திருப்பதாக ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Monday, July 15, 2019, 13:47 [IST]
Other articles published on Jul 15, 2019
English summary
Ben stokes born in newzealand and played in England to won world champion
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X