For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. அந்த பந்தை இங்க கொடுங்க.. கடும் வார்னிங் தந்த அம்பயர்.. அதிரடி ஆக்சன்!

அகமதாபாத்: நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை இந்திய அணி 112 ரன்களுக்கு சுருட்டி உள்ளது.

இப்படி வாக்குவாதம் பண்ணிட்டு இருக்காதீங்க.. கோபமாக கத்திய கோலி.. பரபரப்பு வீடியோ.. என்ன நடந்தது? இப்படி வாக்குவாதம் பண்ணிட்டு இருக்காதீங்க.. கோபமாக கத்திய கோலி.. பரபரப்பு வீடியோ.. என்ன நடந்தது?

இந்திய அணி முதல் இன்னிங்சில் 450+ ரன்களை எடுத்தால் இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் பந்தை சொரசொரப்பாக எச்சில் தடவுவார்கள். பந்து சொரசொரப்பாக இருக்கும் போது நன்றாக ஸ்விங் ஆகும்.

ஸ்விங்

ஸ்விங்

பந்தை இப்படி ஸ்விங் செய்ய வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பக்கத்தில் எச்சில் தடவி அதன் தோல் பகுதியை உரிப்பார்கள். ஆனால் கொரோனா காரணமாக பந்துகளில் எச்சில் தடவ கூடாது என்ற விதி இருக்கிறது. கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த விதி கொண்டு வரப்பட்டது.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவி மாட்டிக்கொண்டார். சில வீரர்கள் பழக்க தோஷத்தில் இப்படி எச்சில் தடுவுவது வழக்கம். ஒரே அணி இரண்டு முறை இந்த தவறை செய்தால் அவர்களின் 5 ரன்கள் குறைக்கப்படும்.

தவறு

தவறு

நேற்று இங்கிலாந்து அணி முதல்முறை இந்த தவறை செய்ததால் கள நடுவர் கடுமையான வார்னிங் கொடுத்தார். அதன்பின் பந்தை வாங்கி அதில் சானிடைசர் வைத்து லேசாக துடைத்தனர். பந்தை மொத்தமாக கழுவ முடியாது என்பதால் லேசாக சானிடைசர் வைத்து துடைத்துவிட்டு மீண்டும் பவுலிங் செய்ய அதை கொடுத்தனர்.

Story first published: Thursday, February 25, 2021, 10:17 [IST]
Other articles published on Feb 25, 2021
English summary
England all-rounder Ben Stokes breached Saliva rules in the 3rd test between India and England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X