நியூசிலாந்தில் பயிற்சியை துவக்கிய பென் ஸ்டோக்ஸ்... 2வது கட்ட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பு

கிறிஸ்ட்சர்ச் : ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக பென் ஸ்டோக்ஸ் உள்ளார். இவர் அந்த அணியால் கடந்த 2018 ஐபிஎல் ஏலத்தில் 12.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில் தன்னுடைய தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் தற்போது நியூசிலாந்தில் அவருடன் உள்ளார்.

தற்போது நியூசிலாந்தில் தன்னுடைய பயிற்சிகளை துவக்கியுள்ள பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் போட்டிகளின் இரண்டாவது கட்டத்தில்தான் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.

யார் இந்த டி நடராஜன்? சேலத்தை சேர்ந்த தமிழக இளைஞர்.. 2 ஆண்டு வலி.. வார்னர் தந்த ஐபிஎல் வாய்ப்பு!

4வது போட்டி

4வது போட்டி

ஐபிஎல்லின் 4வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் சிஎஸ் இடையில் ஷார்ஜாவில் இன்னும் சிறிது நேரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கென இரு அணிகளும் தயாராக உள்ள நிலையில், இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக கருதப்படும் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை.

நியூசிலாந்தில் பயிற்சி

நியூசிலாந்தில் பயிற்சி

தன்னுடைய தந்தை ஜெரால்டிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள காரணத்தால் அவர் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் தற்போது அவருடன் உள்ளார். ஆயினும் ஐபிஎல்லின் இரண்டாவது கட்ட போட்டிகளில் தான் பங்கேற்பேன் என்றும் அதற்கென நியூசிலாந்தில் தன்னுடைய பயிற்சிகளை துவக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்விக்குறியான ஐபிஎல் போட்டி

கேள்விக்குறியான ஐபிஎல் போட்டி

பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து தொடரின் பாதியிலேயே தன்னுடைய தந்தையின் உடல்நல பாதிப்பு குறித்து கேள்வியுற்று ஸ்டோக்ஸ்நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், ஐபிஎல்லில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியானது. ஆயினும் அவர் உடல்நல பாதிப்புக்குள்ளான தன்னுடைய தந்தையுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் வட்டாரங்கள் இரு வாரங்களுக்கு முன்பே தெரிவித்தன.

அணியின் பின்னடைவு

அணியின் பின்னடைவு

மேலும் பென் ஸ்டோக்ஸ் அணியின் முக்கிய வீரராக விளங்கும் நிலையில், அவருக்கு மாற்றாக வேறு ஒரு வீரரையும் அந்த அணி அறிவிக்கவில்லை. பென் ஸ்டோக்ஸ் போன்ற அனுபவமிக்க ஆல்ரவுண்டர் அணியில் இல்லாதது ராஜஸ்தான் ராயல்சுக்கு மிகவும் பின்னடைவாக உள்ளது. அவரது இருப்பை டாம் குர்ரான் ஓரளவிற்கு ஈடுசெய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
RR don't have a quality pace-bowling all-rounder in their ranks and Stokes' absence is a big blow for the franchise
Story first published: Tuesday, September 22, 2020, 20:13 [IST]
Other articles published on Sep 22, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X