For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில்.. நம்பர் ஒன் ஆனார் பென் ஸ்டோக்ஸ்

லண்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர்தான் கடந்த 18 மாதங்களாக ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வந்தார். அந்த இடத்தை தற்போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கைப்பற்றி விட்டார்.

Recommended Video

IPL 2020 Could Start From September 19

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஒருவர் முதலிடத்தில் இருந்தது இதற்கு முன்பு 2006ல்தான் நடந்தது. அப்போது ஆண்ட்ரூ பிளின்டாப் நம்பர் ஒன் வீரராக இருந்தார். அதன் பின்னர் யாருமே வரவில்லை. தற்போது அந்த இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார் ஸ்டோக்ஸ்.

Ben Stokes is No one in world Test all rounders

2வது டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடியிருந்தார் ஸ்டோக்ஸ். இதன் மூலம் அவருக்கு ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதலிடம் கிடைத்துள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரு ஓரமா நடத்திக்கிறட்டுமா.. பெர்மிஷன் கொடுங்களேன்.. அரசிடம் கோரிக்கை வைக்கும் பிசிசிஐஒரு ஓரமா நடத்திக்கிறட்டுமா.. பெர்மிஷன் கொடுங்களேன்.. அரசிடம் கோரிக்கை வைக்கும் பிசிசிஐ

தற்போது பென் ஸ்டோக்ஸ் 497 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவும் கூட ஒரு சாதனைதான். இதற்கு முன்பு அதிகபட்சமாக 517 புள்ளிகளுடன் 2008ம் ஆண்டு ஜேக்கஸ் கல்லிஸ் முதலிடத்தில் இருந்தார். அதன் பிறகு அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றிருப்பவர் ஸ்டோக்ஸ்தான். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹோல்டர் 2வது இடத்தில் இருக்கிறார்.

பேட்ஸ்மேன் வரிசையில் ஸ்டோக்ஸ் 3வது இடத்தில் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் முதலிடம், விராட் கோலி 2வது இடத்தில் உள்ளார். கேன் வில்லியம்சன் மற்றும் பாபர் ஆஸம் ஆகியோர் 4வது இடத்தில் உள்ளனர்.

Story first published: Tuesday, July 21, 2020, 18:33 [IST]
Other articles published on Jul 21, 2020
English summary
Ben Stokes has become No one in world Test all rounders
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X