For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆள் இல்லாத இடத்துல இந்த தம்பிக்கு ஆட வராது.. கொரோனாவால் வந்த வினை!

லண்டன் : கொரோனா வைரஸுக்கு மத்தியில் இங்கிலாந்து நாட்டில் ஆள் இல்லாத மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ளன.

Recommended Video

Ben Stokes performance may get affected says Darren Gough.

இந்த நிலையில், ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் இங்கிலாந்து அணியின் சிறந்த வீரர் பென் ஸ்டோக்ஸ் செயல்பாடு பாதிக்கக் கூடும் என கூறி உள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் டேரன் கஃப்.

மெக்கிராத்துக்கு இணையான பந்துவீச்சாளர்.. பார்த்திவ் பட்டேல் சொல்லும் அந்த முன்னாள் இந்திய வீரர்!மெக்கிராத்துக்கு இணையான பந்துவீச்சாளர்.. பார்த்திவ் பட்டேல் சொல்லும் அந்த முன்னாள் இந்திய வீரர்!

கிரிக்கெட் நடக்கவில்லை

கிரிக்கெட் நடக்கவில்லை

கிரிக்கெட் போட்டிகள் எதுவும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே மார்ச் 13 அன்று ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடைபெற்றது. அதன் பின் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்த நிலையில் ஜூலை மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. அதற்கு இரு நாட்டு அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

காலி மைதானத்தில் போட்டி

காலி மைதானத்தில் போட்டி

இந்த டெஸ்ட் தொடர் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற உள்ளது. வீரர்கள் உயிர் பாதுகாப்பு வளையம் (Bio secure bubble) ஏற்படுத்தப்பட்டு பாதுக்காக்கப்பட உள்ளனர். ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் கிரிக்கெட் ஆடுவது எப்படி இருக்கும் என்பது பற்றி பலரும் பேசி வருகின்றனர்.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

முன்னாள் இங்கிலாந்து வீரர் டேரன் கஃப் இது பற்றி கூறுகையில், பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரர். பெரிய போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுத்துள்ளார். முக்கியமான போட்டியில் இக்கட்டான நேரங்களில் அவர் முன்னே வந்து வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.

மிகச் சிறந்த வீரர்

மிகச் சிறந்த வீரர்

இப்படிப்பட்ட பெரிய வீரர், தற்போது உலகில் மிகச் சிறந்த வீரர் கூட்டமே இல்லாத மைதானத்தில் எப்படி செயல்படுவார் என்பது சுவாரசியமான விஷயம். அவரது செயல்பாடு கொஞ்சம் பாதிக்கும் என்றே நான் நினைக்கிறேன் என்றார் டேரன் கஃப்.

அதிக பரபரப்பு இருக்காது

அதிக பரபரப்பு இருக்காது

இவரது இந்த பேச்சு ஒரளவு உண்மை தான். ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் அதிக பரபரப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. கடைசி ஓவரில் முடியும் போட்டிகளில் கூட சுவாரசியம் குறைய நிறைய வாய்ப்பு உள்ளது. வீரர்கள் ரசிகர்கள் இல்லாததால் உத்வேகம் பெற முடியாமலும் போகலாம்.

Story first published: Sunday, June 7, 2020, 22:05 [IST]
Other articles published on Jun 7, 2020
English summary
Ben Stokes performance may get affected in empty stadium says former England cricketer Darren Gough.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X