For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரொம்ப அமைதியா பீல் பண்றேன்.. 2016க்கு அப்புறமா இப்பதான் இப்படி இருக்கு -விராட் கோலி

துபாய் : ஐபிஎல் தொடரில் கடந்த 2016ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி அணி கோப்பையை தவறவிட்டது. அடுத்த 3 ஆண்டுகளில் ப்ளே -ஆப் சுற்றுக்கு கூட வரவில்லை.

இந்நிலையில் கடந்த 2016க்கு பிறகு தற்போது தான் தான் அமைதியாகவும் சிறப்பாகவும் உணர்வதாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அணியில் சிறப்பான வீரர்கள் பலர் உள்ளதாகவும் அணி நிர்வாகம் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களது உணர்வுகளை புரிந்து கொண்டு செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

ரெய்னா போனது கூட பரவாயில்லை.. ஆனா ஹர்பஜன் விலகியது தான் சிக்கல்.. அந்த விஷயத்தில் தவிக்கும் சிஎஸ்கே!ரெய்னா போனது கூட பரவாயில்லை.. ஆனா ஹர்பஜன் விலகியது தான் சிக்கல்.. அந்த விஷயத்தில் தவிக்கும் சிஎஸ்கே!

கோப்பையை வெல்லாத ஆர்சிபி

கோப்பையை வெல்லாத ஆர்சிபி

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல்லில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும் அவர்களால் கோப்பையை பெற முடியவில்லை. கடந்த 2016ல் கூட இறுதிப்போட்டி வரை விளையாடியும் கோப்பையை வெல்லவில்லை.

விராட் கோலி மகிழ்ச்சி

விராட் கோலி மகிழ்ச்சி

இந்நிலையில் கடந்த 2016க்கு பிறகு தற்போதுதான் அமைதியாகவும் சிறப்பாகவும் உணர்வதாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆர்சிபியின் யூடியூப் நிகழ்ச்சியான போல்ட் டயரீசிற்காக பேசிய விராட் கோலி, வரும் 19ம் தேதி முதல் துவங்கவுள்ள ஐபிஎல் சீசன் குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

ஏபி டீ வில்லியர்ஸ் ஒத்த கருத்து

ஏபி டீ வில்லியர்ஸ் ஒத்த கருத்து

இந்த சீசன் சிறப்பாக அமையும் என்ற கருத்தை அணியின் ஏபி டீ வில்லியர்சும் உணர்ந்து தன்னிடம் தெரிவித்ததாகவும் விராட் கோலி கூறினார். மற்ற சீசன்களைவிட தற்போதைய சீசனில்தான் தான் எந்த சுமையும் இன்றி ரிலாக்சாக உணர்வதாகவும் கோலி தெரிவித்தார். அணியில் சிறப்பான பல்வேறு திறன்களை கொண்ட வீரர்கள் உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

நம்பிக்கை அளிக்கும் வீரர்கள்

நம்பிக்கை அளிக்கும் வீரர்கள்

தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் நிர்வாகத்தினர் இணைந்து இந்த அமைதியை தனக்கு மட்டுமின்றி அனைத்து வீரர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் கோலி குறிப்பிட்டுள்ளார். மைக் ஹெசன் வீரர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பாலமாக செயல்படுவதாகவும் கோலி தெரிவித்தார். கிறிஸ் மோரீஸ், ஆரோன் பின்ச், ஜோஷ் பிலிப் போன்றவர்களும் நம்பிக்கை அளிப்பதாக கோலி தெரிவித்தார்.

Story first published: Tuesday, September 8, 2020, 17:12 [IST]
Other articles published on Sep 8, 2020
English summary
I believe we won't be overburdened this time around which is a great thing to know -Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X