புவனேஸ்வர் குமார் இடத்திற்கு சிஎஸ்கே வீரரால் ஆபத்து.. டி20 உலகக்கோப்பையிலும் புவியை ஓரங்கட்ட வாய்ப்பு

திருவனந்தபுரம் : ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு 10 மாதங்களுக்கு முன்பு ஒரு இந்திய அணியை நம்மை தேர்வு செய்ய சொல்லி இருந்தால் புவனேஸ்வர் குமார் பெயரை முக்கியமாக எழுதி இருப்போம்.

Recommended Video

T20 World Cup அணியில் Bhuvneshwar Kumar இடத்திற்கு ஆபத்து *Cricket

ஆனால் காலம் மாற, காட்சிகள் மாறியது. சின்ன சின்ன தொடர்களில் எல்லாம் சிறப்பாக பந்துவீசி ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார் புவனேஸ்வர் குமார்.

ஆனால், டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக தனது ஃபார்மை இழந்த புவனேஸ்வர் குமார், இந்திய அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமாருக்கு பிசிசிஐ கெடு.. அதிரடி உத்தரவை பிறப்பித்த தேர்வுக்குழுஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமாருக்கு பிசிசிஐ கெடு.. அதிரடி உத்தரவை பிறப்பித்த தேர்வுக்குழு

புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு

புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு

இந்த நிலையில், புவனேஸ்வர் குமாரை அணியை விட்டு நீக்க வேணடும் என்று பலத்தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால், அவருக்கு பதிலாக தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது டி20 உலகக் கோப்பையில் ரிசர்வ் வீரராக தான் தீபக் சாஹர் இருக்கிறார்.

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

தென்னாப்பிரிக்க தொடரில் பிளேயிங் லெவனில் தீபக் சாஹர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. தீபக் சாஹர் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்யக் கூடியவர். மேலும் நக்கூல் பந்துகளை வைத்தும், வேகம் குறைவாக பந்துவீசியும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தருவார். மேலும் தீபக் சாஹர் பேட்டிங்கில் அதிரடியாக விளையாட கூடியவர்.

ஆல்ரவுண்டர்

ஆல்ரவுண்டர்

தீபக் சாஹர் இறுதியில் வருகிறார் என்றால், முன் வரிசை பேட்ஸ்மேன்கள் தைரியமாக விளையாடலாம். ஒவ்வொரு அணியிலும் 9 பேர் நன்றாக பேட்டிங் செய்வார்கள். ஆனால் இந்திய அணியில் 7 பேரை தாண்டினாலே பேட்டிங் வராது. இதனால், தீபக் சாஹரை சேர்ப்பது மூலம் பேட்டிங்கும் வலுப்படும்.

அக்னி பரிட்சை

அக்னி பரிட்சை

தெனனாப்பிரிக்க தொடரில் புவி இல்லாத நிலையில், சாஹர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்தினால், டி20 உலகக் கோப்பை மெயின் அணியில் கண்டிப்பாக தீபக் சாஹருக்கு இடம் கிடைக்கும். இதனால் புவினேஸ்வர் குமார் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னாப்பிரிக்க தொடரை வைத்தே இந்தியா தங்களது பைனல் லெவனை தேர்வு செய்யும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Bhuvaneshwar kumar place is in danger for icc t20 world cup புவனேஸ்வர் குமார் இடத்திற்கு சிஎஸ்கே வீரரால் ஆபத்து.. டி20 உலகக்கோப்பையிலும் புவியை ஓரங்கட்ட வாய்ப்பு
Story first published: Tuesday, September 27, 2022, 17:56 [IST]
Other articles published on Sep 27, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X