For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன எனக்கு ஆர்வம் இல்லையா?.. புவனேஷ்வர்குமார் குறித்து தவறாக பரவிய தகவல்..கடும் பதிலடி!

மும்பை: புவனேஷ்வர்குமாருக்கே தெரியாமல் அவரின் டெஸ்ட் கிரிக்கெட் முடிந்துவிட்டதாக பரவிய செய்திகள் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததால் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் வருத்தத்தில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பக்கம் திரும்பியுள்ளது.

 மேட்சுக்கு '1' கோடி.. டபுள் 'வசூல்' - அதிர வைக்கும் 'அமீரகம்' ஐபிஎல் மேட்சுக்கு '1' கோடி.. டபுள் 'வசூல்' - அதிர வைக்கும் 'அமீரகம்' ஐபிஎல்

 புவனேஷ்வருக்கு இடமில்லை

புவனேஷ்வருக்கு இடமில்லை

இங்கிலாந்தில் வரும் ஜூன் 18ம் தேதி முதல் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதனை தொடர்ந்து ஆக.4ம் தேதி முதல் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இதற்காக வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது.

இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் புவனேஷ்குமார் இடம் பெறாதது பேசுப்பொருளானது.

என்ன காரணம்

என்ன காரணம்

இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்துவீச்சு கட்டுப்படக்கூடிய ஒன்று. அப்படிபட்ட களத்தில் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் புவனேஷ்வர் குமாருக்கு இடம் கிடைக்காதது ரசிகர்களை ஏமாற்றியது. இதற்கு காரணமாக, புவனேஷ்வர் குமார் இனி டெஸ்ட் கிரிக்கெட் ஆட விரும்பவில்லை. அவர் சிகப்பு நிறப்பந்துகளுக்கு பதிலாக தற்போது முழுமுழுக்க வெள்ளை பந்துகளிலேயே பயிற்சி மேற்கொள்கிறார் என தகவல்கள் வெளியானது. இதனால் அவர் இனி டெஸ்டுக்கு சரிபட்டு வரமாட்டார் என பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

 தகவலுக்கு மறுப்பு

தகவலுக்கு மறுப்பு

இந்நிலையில் புவனேஷ்வர் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அது உண்மை அல்ல. நான் எப்போதும் 3 வடிவ கிரிக்கெட்டிற்கு தயாராகவே உள்ளேன். அணி தேர்வுகளை கண்டுகொள்வதில்லை, நான் எப்போதும் தயாரகவே இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 இந்தியாவுக்கு பின்னடைவு

இந்தியாவுக்கு பின்னடைவு

புவனேஷ்வர் குமார் 10 ஓவர்கள் கூட வீச ஆர்வமாக இல்லை என பிசிசிஐ நினைத்துதான் அவரை இங்கிலாந்து தொடரில் தேர்வு செய்யவில்லை. ஆனால் அவரின் இந்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து போன்ற களத்தில் அனுபவ வீரர் புவனேஷ்வர்குமாரை இந்திய அணி கண்டிப்பாக மிஸ் செய்யும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, May 16, 2021, 10:45 [IST]
Other articles published on May 16, 2021
English summary
Bhuvneshwar Kumar Slams Media Reports of him Not wanting To Play Test Cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X