For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நான் வெறும் பேப்பருக்கு தான் துணை கேப்டன்".. போட்டுடைத்த புவனேஷ் குமார் - பிசிசிஐ "அதிருப்தி"?

கொழும்பு: இலங்கை சென்றிருக்கும் இந்திய 'ஏ' அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள புவனேஷ் குமாரின் கருத்து ஒன்று, சற்றே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், இந்திய 'ஏ' அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது பிசிசிஐ.

இப்படியா பொறாமை படுவது? ச்ச ச்ச.. தோனி பிறந்தநாளன்று கம்பீர் போட்ட பதிவு.. கடும் கோபத்தில் ரசிகர்கள்இப்படியா பொறாமை படுவது? ச்ச ச்ச.. தோனி பிறந்தநாளன்று கம்பீர் போட்ட பதிவு.. கடும் கோபத்தில் ரசிகர்கள்

அங்கு அனுப்பிய முதல் நாளில் இருந்து அவ்வப்போது சிக்கல்கள், சர்ச்சைகள், கருத்து பரிமாற்றங்கள் என சலசலப்புகள் எழுந்தாலும், டிராவிட் எனும் ஒற்றை ஆளுமை அங்கு இருப்பதால், எல்லாமே புஸ்ஸாகி விடுகிறது.

ப்ரேமதசா ஸ்டேடியத்தில்

ப்ரேமதசா ஸ்டேடியத்தில்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

புவனேஷ் துணை கேப்டன்

புவனேஷ் துணை கேப்டன்

இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது. புவனேஷ் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாண்ட்யா ஷாக்

பாண்ட்யா ஷாக்

பலரும், ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவோ அல்லது துணை கேப்டனாகவோ நியமிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. மாறாக, புவனேஷ் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்து புவனேஷ் குமார் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் சொல்லியிருக்கும் கருத்துக்கள் விரக்தியில் சொல்லப்பட்டதா அல்லது விளைவுகள் புரியாமல் பேசியிருக்கிறாரா என்று நமக்கே குழப்பமாக உள்ளது.

ஒரு மரியாதைக்கு தான்

ஒரு மரியாதைக்கு தான்

இதுகுறித்து அவரிடம், "துணை கேப்டன் பதவி உங்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்துகிறதா?" என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த புவனேஷ், "வெறும் பேப்பருக்கு தான் நான் துணை கேப்டன். இதனால், பெரிதாக எந்த மாற்றமும் வந்துவிடப் போவதாக நான் நினைக்கவில்லை. ஒரு மூத்த வீரராக இருப்பதன் எனது பங்கு மற்ற வீரர்களின் திறன்களையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் விஷயங்களைச் செய்வதாகும். இந்திய அணியின் துணை கேப்டனாக இருப்பது ஒரு மரியாதை மற்றும் பொறுப்பு. அவ்வளவே. எனவே, நான் செய்துகொண்டிருந்த காரியங்களைத் தொடர்ந்து செய்ய முயற்சிப்பேன், இந்த சுற்றுப்பயணத்தில் எங்கள் அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்" என்று பூசியிருக்கிறார்... சரி சொல்லியிருக்கிறார். இதன் மூலம், அவர் துணை கேப்டன் பதவியை விரும்பவில்லையா? என்ற ரீதியில் கேள்விகள் எழுப்பப்படுகிறது.

Story first published: Wednesday, July 7, 2021, 20:19 [IST]
Other articles published on Jul 7, 2021
English summary
Bhuvneshwar on vice-captaincy for SL tour - புவனேஷ் குமார்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X