For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“6 விக்கெட்கள்.. 5 டக் அவுட்கள்” டி20ல் ரஷிக் கான் ஆடிய ருத்ர தாண்டவம்.. ஐபிஎல்-ல் எகிறிய மவுசு!!

பிரிஸ்பேன்: பிக் பேஷ் லீக்கில் ரஷித் கான் செய்துள்ள பெரும் சாதனையால் ஐபிஎல் தொடரில் அவருக்கான மவுசு படு உச்சத்திற்கு சென்றுள்ளது.

Recommended Video

Rashid Khan's Career Best Six-fer in BBL 2021-2022 | ADS vs BRH | OneInidia Tamil

ஐபிஎல் தொடரை போலவே ஆஸ்திரேலியாவில் ஆண்டு தோறும் பிக் பேஷ் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இந்தாண்டின் 46வது லீக் போட்டியில் தான் ரஷித் தனது கிரிக்கெட் பயணத்தின் சிறந்த பவுலிங் ரெக்கார்டை பதித்துள்ளார்.

“ஐபிஎல் என் மகிழ்ச்சியை கெடுத்துவிட்டது”.. டிவில்லியர்ஸ் ஓய்வு பெற உண்மை காரணம்.. ரசிகர்கள் வருத்தம்“ஐபிஎல் என் மகிழ்ச்சியை கெடுத்துவிட்டது”.. டிவில்லியர்ஸ் ஓய்வு பெற உண்மை காரணம்.. ரசிகர்கள் வருத்தம்

பிக் பேஷ் தொடர்

பிக் பேஷ் தொடர்

இன்று ரஷித் கான் இடம்பெற்றுள்ள அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய அடிலெய்ட் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. கடைசி ஓவரில் ரஷித் கான் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 325 ஆகும்.

விக்கெட் மழை

விக்கெட் மழை

பேட்டிங்கில் தான் வியக்கவைத்தார் என்றால் பவுலிங் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. ரஷித் வீசிய முதல் ஓவரிலேயே எதிரணி 11 ரன்களை விளாசியது. ஆனால் 2வது ஓவரில் இருந்து தனது கியரை மாற்றினார். அவரின் 2வது ஓவரில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் சாம் ஹீஸ்லெட், ஜாக் லேமான் என 2 வீரர்கள் டக் அவுட்டாகினர்.

அசரவைத்த ரெக்கார்ட்

அசரவைத்த ரெக்கார்ட்

அதன்பின்னர் வீசிய ஓவர்களில் மேத்யூவ் குஹ்னேமான் என்ற வீரர் மட்டும் ஒரே ஒரு ரன்னில் வெளியேற, மற்ற 3 வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறினர். இதனால் ரஷித்கான் டி20 கிரிக்கெட்டில் 4வது முறையாக 5 விக்கெட் ஹவுலை எடுத்தார். பிக் பேஷ் லீக்கில் இது முதல் முறையாகும். இந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்த ரஷித் கான் 6 விக்கெட்களை சாய்த்திருந்தார். இதில் 5 பேர் டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்-ல் எகிறிய மவுசு

ஐபிஎல்-ல் எகிறிய மவுசு

சர்வதேச அளவில் கலக்கி வரும் ரஷித் கானின் இந்த அபார பவுலிங்கால் அனைத்து ஐபிஎல் அணிகளின் கவனமும் தற்போது அவரின் பக்கம் திரும்பியுள்ளது. ஐதராபாத் அணியில் இருந்து வெளியேறிய அவரை, இந்தாண்டு லக்னோ அணி வாங்குவதாக இருந்தது. ஆனால் சம்பள பிரச்சினை காரணமாக பின் வாங்கியது. இந்நிலையில் இனி மெகா ஏலத்தில் அவருக்கான மதிப்பு உச்சத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, January 12, 2022, 21:02 [IST]
Other articles published on Jan 12, 2022
English summary
Rashid Khan’s career-best bowling figure in Big Bash League, creates a huge market in IPL mega auction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X