டி20 உலககோப்பையில் பும்ராவுக்கு பதில் யார்? 3 வீரர்களுக்கு வாய்ப்பு.. யாருக்கு இடம் கிடைக்கும் ?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பும்ரா டி20 உலககோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

Recommended Video

IND vs SA T20I Series: Bumrah-வுக்கு Replacement Siraj! BCCI அறிவிப்பு

இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பும்ரா விலகியதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அவ்வளவு தான் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பும்ராவின் இடத்தை நிரப்பப்போகும் வீரர்கள் யார், அவர்களுடைய சாதகம், பாதகம் என்ன என்று தற்போது பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்கா 9 ரன்களுக்கு 5 விக்கெட்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்.. அனல் பறந்த இந்திய பந்துவீச்சுதென்னாப்பிரிக்கா 9 ரன்களுக்கு 5 விக்கெட்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்.. அனல் பறந்த இந்திய பந்துவீச்சு

முகமது ஷமி

முகமது ஷமி

டி20 உலககோப்பையில் இந்திய வீரர் பும்ராவின் இடத்தை நிரப்ப தகுதி உடைய ஒரே நபர் என்றால் அது முகமது ஷமி தான். முகமது ஷமி அனுபவம் வாய்ந்த வீரர். ஆஸ்திரேலிய அடுகளத்தில் சிறப்பாக பந்துவீசி இருக்கிறார். தற்போது ஷமி மேட்ச் பிராக்டிஸ் இல்லாமல் உள்ளது மட்டுமே மைனசாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஷமி ரிசர்வ் வீரராக உள்ளதால், அவருக்கு தான் இடம் கிடைக்கும்.

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக தீபக் சாஹர் இருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது கூட, தீபக் சாஹர் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். மேலும் தீபக் சாஹர் நல்ல பேட்ஸ்மேன் என்பதால், அவர் இந்திய அணியில் இடம் பிடித்தால் அணிக்கு அது கூடுதல் நன்மையை அளிக்கும்.

ஆவேஷ் கான்

ஆவேஷ் கான்

பும்ராவின் திறமைக்கு பக்கத்தில் கூட ஆவேஷ் கானால் வர முடியாது என்றாலும், வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஐபிஎல் தொடரில் எல்லாம் ஆவேஷ் கான் சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்து இருக்கிறார். தற்போது உடல் நலம் குன்றிய ஆவேஷ் கான், மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முகமது சிராஜ்

முகமது சிராஜ்

டி20 உலககோப்பையில் முகமது சிராஜின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இருப்பினும், சமீப காலமாக அவர் சிறப்பாக பந்துவீசி இருக்கிறார். சிராஜ், ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதனால், அவருக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Jasprit bumrah is ruled out from icc t20 world cup 2022 - Reports டி20 உலககோப்பையில் பும்ராவுக்கு பதில் யார்? 3 வீரர்களுக்கு வாய்ப்பு.. யாருக்கு இடம் கிடைக்கும் ?
Story first published: Thursday, September 29, 2022, 17:58 [IST]
Other articles published on Sep 29, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X