ஹிட்மேன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நாள் இன்று..!! கடைசி தடையை உடைப்பாரா ரோகித் சர்மா?

மும்பை: இந்திய ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் இன்று முக்கியமான நாள்.

டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டாலும், பி.சி.சி.ஐ.யின் திடீர் உத்தரவால் அவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் இருந்தார்.

பி.சி.சி.ஐ. போட்ட தடைக்கல்லை ரோகித் உடைத்தாரா, அவர் கிரிக்கெட் வாழ்க்கை என்னவாகும் என்பது இன்று தெரிந்துவிடும்.

பி.சி.சி.ஐ. போட்ட தடை

பி.சி.சி.ஐ. போட்ட தடை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய அணி நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் ரோகித் சர்மா, பி.சி.சி.ஐ. போட்ட தடையை உடைக்க வேண்டும். ரோகித் சர்மா தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் காயமடைந்தார். அவர் காயத்திலிருந்து குணமடைந்தாலும் , உடல் எடை அதிகமாக இருப்பதாக கூறி, அவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க பி.சி.சி.ஐ. அனுமதி வழங்கவில்லை.

யோ யோ டெஸ்ட்

யோ யோ டெஸ்ட்

இதனால் கடந்த ஒரு மாதம் டயட், உடற்பயிற்சி என இருந்த ரோகித் சர்மா தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். இந்த நிலையில், அவரது உடல் தகுதியை நிர்ணயிக்கும் யோ யோ டெஸ்ட் இன்று நடைபெறுகிறது. உடல் எடையை குறைத்தாலும் யோ யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். (ஒவ்வொரு விசிலுக்கும் வேகத்தை அதிகரித்து குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓடி முடிக்க வேண்டும் இதுவே யோ யோ டெஸ்ட்)

எதிர்காலம்

எதிர்காலம்

அப்படி ரோகித் சர்மா தேர்ச்சி பெறவில்லை என்றால் மீண்டும் அவரது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறும் வரை அவர் இந்திய அணிக்கே திரும்ப முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே விராட் கோலி கேப்டன் பொறுப்பில் விலகிய நிலையில், நல்ல கேப்டன் இல்லாமல் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

India's Predicted ODI,T20I Squads Against WI! Rohit to Return, Ashwin may Miss | OneIndia Tamil
வெற்றி பெறுவார்

வெற்றி பெறுவார்

சொல்லப்போனால், 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியா ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் வெல்லவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணியும் டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் சாதாரண அணி கிடையாது. இதனால் ரோகித்தின் கேப்டன் அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு தேவை. இந்த நிலையில், ரோகித் சர்மா இந்த உடல்பயிற்சியில் எளிதில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Big day for Indian captain Rohit sharma as he undergoes fitness test ஹிட்மேன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நாள் இன்று..!! கடைசி தடையை உடைப்பாரா ரோகித் சர்மா?
Story first published: Wednesday, January 26, 2022, 11:07 [IST]
Other articles published on Jan 26, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X