For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் பைனலில் பாலிவுட் அணிகள்: ஜெயிக்கப்போவது யாரு?

By Veera Kumar

பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் பாலிவுட் நட்சத்திரங்களாலும் அவர்களின் அணிகளாலும் நாளை குலுங்கப்போகிறது. ஷாருக்கானும், பிரீத்தி ஜிந்தாவும் வெள்ளித்திரைக்கு வெளியே முதன்முறையாக மல்லுக்கட்டப்போவதை பார்க்க, ரசிகர்கள் கூட்டம் காத்துக்கிடக்கிறது. ஐபிஎல் சீசன் 7ல், ஆரம்பத்தில் சொதப்பிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அதன்பிறகு வீறுகொண்டெழுந்து விஸ்வரூப வெற்றிகளை தன்வசமாக்கியது. முதல் 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வென்ற அணி பைனலுக்கு வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் பஞ்சாப் துவக்கம் முதல் சொல்லியடிக்கும் கில்லியாக அடித்து நொறுக்கிவருகிறது. ஆனானப்பட்ட சென்னை டீமையே மூன்று முறை டவுசர் கிழித்துள்ளது பஞ்சாப் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

பாலிவுட்டின் பலப்பரிட்சை

பாலிவுட்டின் பலப்பரிட்சை

'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கானின் கொல்கத்தா அணி ஒருமுறை ஐபிஎல் கோப்பையை உயர்த்திபிடித்துள்ளபோதிலும், கன்னக்குழி அழகி பிரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் பைனலுக்கு கூட இதுவரை போனதில்லை. ஒவ்வொரு சீசனிலும் லீக் ஆட்டங்களில் மட்டும் ஏதோ சில போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டு பிரீத்தி ஜிந்தாவை கட்டிப்பிடித்த சந்தோஷத்தோடு நடையை கட்டுவது பஞ்சாப் வீரர்கள் வாடிக்கை. இம்முறை பைனலுக்கு அந்த அணி வந்ததே பெரிய சாதனைதான்.

பட்டையை கிளப்பும் பவுலிங்

பட்டையை கிளப்பும் பவுலிங்

பஞ்சாப்பைவிட கொல்கத்தா அணியின் பவுலிங் ஒருபடி மேல்தான். மோர்னே மோர்க்கல், சுனில் நரைன், இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாகிப் அலி ஹசன் ஆகியோர் அந்த அணியின் பந்து வீச்சுக்கு பலம் சேர்க்கிறார்கள். பஞ்சாப் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் இந்த சீசனில் 6 முறை இடதுகை சுழல் பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்ததை சாகிப் அறிந்துதான் வைத்துள்ளார். பேட்டிங்கில் ராபின் உத்தப்பா, கேப்டன் கவுதம் கம்பீர், தூக்கத்தில் இருந்து விழித்தவரைப்போல என்றாவது ஒருநாள், நன்றாக ஆடும், யூசுப் பதான் ஆகியோர்தான் சொல்லிக்கொள்ளும்படி உள்ளனர்.

போட்டு தாக்கும் பேட்டிங்

போட்டு தாக்கும் பேட்டிங்

பஞ்சாப்பின் பலமே அதன் பேட்டிங்கில்தான் உள்ளது. வீரேந்திரசேவாக், மனான் வோக்ரா, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், விருதிமான் ஷா, கேப்டன் ஜார்ஜ் பெய்லி என பெயரை கேட்டாலே எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு பேதி புடுங்கும் பேட்ஸ்மேன்கள் பஞ்சாப் அணியில் உள்ளனர். 'திவ்யா இல்லாட்டி திரிஷா', 'திரிஷா இல்லாட்டி நயன்தாரா' என்பதைப்போல, சேவாக் விட்டால், மேக்ஸ்வெல், அட அவரும் விட்டால், மில்லர் என யாராவது ஒரு பேட்ஸ்மேன் அன்னன்னைக்கு பார்முக்கு வந்து காப்பாற்றிவிடுவார்கள். ஜான்சன் மட்டும் பெயர் சொல்லும் பவுலராக இருந்தபோதிலும், கரன்வீர்சிங், அக்சர்பட்டேல் ஆகியோரின் குறைவேக பந்து வீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களை பயமுறுத்துவதாக உள்ளது.

அனைத்து ரோடுகளும் பெங்களூரை நோக்கி

அனைத்து ரோடுகளும் பெங்களூரை நோக்கி

பெங்களூரில் நடக்க உள்ள அனல்பறக்கப்போகும் இவ்விரு அணிகள் நடுவேயான ஆட்டத்தை பார்க்க உள்ளூர் ரசிகர் மட்டுமின்றி, சென்னை, மும்பை போன்ற நகரங்களிலுள்ள ரசிகர்களும் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். டிக்கெட் வாங்க ரசிகர்கள் அடிதடியில் இறங்கி, கடைசியில் போலீஸ் தடியடி நடத்த வேண்டிய நிலை சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில்.

கொல்கத்தா அணி விவரம்

கொல்கத்தா அணி விவரம்

கவுதம் கம்பீர் (கேப்டன்), ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சாகிப் அலி ஹசன், ரியான் டென் டோஸ்கொத்தி, சூர்யகுமார் யாதவ், மோர்னே மோர்க்கல், உமேஷ் யாதவ், வினய்குமார், சுனில் நரைன், கல்லீஸ், ஆன்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், கிறிஸ் லைன், மன்விந்தர் பிஸ்லா, தேபரதா தாஸ், குல்தீப் யாதவ், சியான் மொன்டல், வீர் பிரதாப் சிங்.

இவங்க பஞ்சாப்

இவங்க பஞ்சாப்

ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), வீரேந்திரசேவாக், மனான் வோக்ரா, விருதிமான் ஷா, கிளன் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், அக்சர் பட்டேல், ரிஷி தவான், மிட்சேல் ஜான்சன், கரன்வீர்சிங், எல்.பாலாஜி, சந்தீப் ஷர்மா, பர்விந்தர் அவானா, ஹென்ட்ரிக்ஸ், சஹுன் மார்ஸ், செடேஸ்வர் பூஜாரா, மன்தீப் சிங், சர்துல் தாக்கூர், சிவம் சர்மா, அனுரீத் சிங், குர்கீரட் சிங் மான், முரளி கார்த்திக்.

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

ஐபிஎல் சீசன் 7ன் பைனல் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. பெங்களூரில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் 15 நிமிடங்களுக்கு மேல் மழை தொடர்ந்து நீடிக்காது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, May 31, 2014, 18:00 [IST]
Other articles published on May 31, 2014
English summary
The focus has remained firmly on cricket this time around and in what seems to be the perfect finale, the seasons most consistent team Kings XI Punjab would eye a maiden triumph against the ever-resilient Kolkata Knight Riders in the title clash of the seventh Indian Premier League Bangalore on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X