For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மச்சி 100 மீட்டர் ஓடலாம்.. ரெடியா.. பஜ்ஜி, யுவராஜுக்கு போல்ட் சவால்!

பெங்களூர்: 100 மீட்டர் ஓட்டப் போட்டி வைக்கலாம். அதில் என்னுடன் மோத யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் தயாரா என்று சவால் விட்டுள்ளார் உலகின் அதி வேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட்.

பெங்களூர் வந்துள்ள உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் உலக சாதனைகளை வைத்திருப்பவர் ஆவார்.

இந்த நிலையில் ஜாலியான சவால் ஒன்றை அவர் யுவராஜுக்கும், ஹர்பஜன் சிங்குக்கும் விடுத்துள்ளார்.

சவால்

சவால்

இன்று மாலை பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்கும் காட்சி கிரிக்கெட் போட்டியில் போல்ட் பங்கேற்கிறார். இதில் யுவராஜ், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். அதே போட்டியில் தன்னுடன் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவர் சவால் விட்டுள்ளார்.

14 விநாடிகளில் கடக்க வேண்டும்

14 விநாடிகளில் கடக்க வேண்டும்

இதுகுறித்து பெங்களூரில் நடந்த பூமா ஷூ நிறுவன நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த ஓட்டப் போட்டியில் யுவராஜ் சிங்கும், ஹர்பஜன் சிங்கும் 14 அல்லது 14.5 விநாடிகளில் போட்டி தூரத்தைக் கடக்க வேண்டும் என்று சவால் விட்டார் போல்ட்.

சாதனை நேரம் 9.58 விநாடி

சாதனை நேரம் 9.58 விநாடி

100 மீ்ட்டர் ஓட்டத்தில் போல்ட் வைத்துள்ள சாதனை நேரமானது 9.58 விநாடி என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சின்னச்சாமி ஸ்டேடியத்தில்

அதே சின்னச்சாமி ஸ்டேடியத்தில்

அதே சின்னச்சாமி ஸ்டேடியத்திலேயே இந்த சவாலையும் சந்திக்க நான் ரெடி. அவர்கள் ரெடியா என்றும் சிரித்தபடி கேட்டுள்ளார் போல்ட்.

கெய்ல்தான் பாஸ்ட்...!

கெய்ல்தான் பாஸ்ட்...!

சரி உங்கள் பார்வையில் யார் அதி வேகமாக ஓடும் கிரிக்கெட் வீரர் என்ற கேள்விக்கு சந்தகமே இல்லை, கிறிஸ் கெய்ல்தான் என்று பட்டென்று பதிலளித்தார் போல்ட். இருவருமே மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவில்லியர்ஸும்...!

டிவில்லியர்ஸும்...!

அதேசமயம், அடுத்து அவர் பேசும்போது, இன்னொருவரும் இருக்கிறார். அவர் கெய்லுடன் விளையாடியுள்ளார். அவர் பெயர் என்னவென்று தெரியவில்லை என்று கூறியபோது, கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் ஏப் டிவில்லியர்ஸ் என்று குரல் கொடுக்க, ஆம், அவர்தான் என்று ஆமோதித்தார் போல்ட். இருவருமே சிறப்பாக ஓடக் கூடியவர்கள் என்றும் போல்ட் தெரிவித்தார்.

பஜ்ஜி.. யுவி.. போல்ட் சவாலை ஏத்துக்க ரெடியா...?

Story first published: Tuesday, September 2, 2014, 16:37 [IST]
Other articles published on Sep 2, 2014
English summary
The fastest man on the planet, Usain Bolt has thrown a challenge at Indian cricketers Yuvraj Singh and Harbhajan Singh at the M Chinnaswamy Stadium today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X