For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெட்டிங்... டோணிக்கும் தொடர்பு?.. புக்கி போடும் குண்டு

சென்னை: கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டியில் பெட்டிங் நடந்தது. இந்த விவகாரத்தில் கேப்டன் டோணி மற்றும் குருநாத் மெய்யப்பன் ஆகியோருக்கு நேரடியான தொடர்பு இருந்தது என்று ஒரு புக்கி கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளது.

பெட்டிங் தொடர்பான விசாரணையை நடத்திய தமிழக கியூ பிரிவு முன்னாள் எஸ்.பி. சம்பத் குமார், நீதிபதி முத்கல் கமிட்டியிடம் அளித்த அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பத் குமார், கிட்டி என்கிற உத்தம் ஜெயின் என்ற புக்கியிடம் நடத்திய விசாரணையின்போது அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் போட்டி

ஜெய்ப்பூர் போட்டி

கடந்த ஆண்டு மே 12ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த போட்டிதான் தற்போது இந்த அறிக்கை மூலம் கவனிப்புக்குரியதாகியுள்ளது.

சென்னை - ராஜஸ்தான்

சென்னை - ராஜஸ்தான்

அன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

தோற்றுப் போனது சென்னை

தோற்றுப் போனது சென்னை

பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டோணி - ரெய்னா சீப் அவுட்

டோணி - ரெய்னா சீப் அவுட்

இப்போட்டியில் டோணியும், சுரேஷ் ரெய்னாவும் மோசமான முறையில் ஆட்டமிழந்தனர். ரெய்னா ஒரு ரன்னும், டோணி 2 ரன்களும் எடுத்தனர்.

நடந்தது என்ன...

நடந்தது என்ன...

அந்தப் போட்டியில் நடந்தது என்ன என்பது குறித்து சம்பத் குமாரிடம் கிட்டி அளித்த வாக்குமூலத்தில், ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் குறித்தும், அவர் புக்கிகளுக்கு சென்னையில் ஏற்பாடு செய்யும் விருந்துகள் குறித்தும் விளக்கியுள்ளார்.

டோணியுடன் நேரடித் தொடர்பு

டோணியுடன் நேரடித் தொடர்பு

மேலும் சென்னை அணியின் கேப்டன் டோணி, சென்னை அணியின் பிரின்சிபல் குருநாத் மெய்யப்பன் ஆகியோருடன் தான் தொடர்ச்சியான தகவல் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார் கிட்டி.

பிக்ஸ் செய்ய பேச்சுவார்த்தை

பிக்ஸ் செய்ய பேச்சுவார்த்தை

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கிடையிலான ஜெய்ப்பூர் போட்டியை பிக்ஸ் செய்வது தொடர்பாக பேச்சு நடந்து வருவதாகவும், இதுகுறித்து குருநாத் மெய்யப்பன், டோணியிடமும், இன்னும் சிலரிடமும் பேசி இறுதி செய்யவுள்ளதாகவும் தன்னிடம் விக்ரம் அகர்வால் தெரிவித்ததாக கிட்டி கூறியுள்ளார்.

ஏப்ரலிலேயே பணம் கொடுத்து விட்டனர்

ஏப்ரலிலேயே பணம் கொடுத்து விட்டனர்

மேலும், இந்தப் போட்டியை பிக்ஸ் செய்வது தொடர்பாக ஏப்ரல் 27ம் தேதியே தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்துப் பணப் பரிவர்த்தனையையும் முடித்து விட்டனர் என்றும் கூறியுள்ளார் கிட்டி.

அகர்வால், மனைவி வந்தனாவின் மர்மத் தொடர்புகள்

அகர்வால், மனைவி வந்தனாவின் மர்மத் தொடர்புகள்

விக்ரம் அகர்வாலுக்கும், அவரது மனைவி வந்தனாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூரில் பல மர்மமான தொடர்புகள் இருப்பதாகவும் கிட்டி கூறியுள்ளாராம்.

உறுதிப்படுத்த முடியவில்லை

உறுதிப்படுத்த முடியவில்லை

கிட்டி சொன்ன விவரங்களை வைத்து விசாரித்த தமிழக சிபிசிஐடி போலீஸார், பெட்டிங் நடந்ததை மட்டுமே உறுதி செய்துள்ளனர். அதேசமயம், மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக எதையும் அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லையாம்.

கிட்டி சொல்வது உண்மையா..

கிட்டி சொல்வது உண்மையா..

கிட்டி சொல்வதைப் பார்த்தால் ஏதோ டோணியும் நேரடியாகவே சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது போல உள்ளது. ஆனால் இதில் உண்மை என்பது என்ன என்பது தெரியவில்லை.

Story first published: Wednesday, February 12, 2014, 8:40 [IST]
Other articles published on Feb 12, 2014
English summary
An IPS officer from Tamil Nadu, who deposed before the Justice Mukul Mudgal committee probing allegations of spot-fixing during IPL 6, has spoken about a bookie who confessed to fixing the outcome of the match between Chennai Super Kings and Rajasthan Royals. The Mudgal committee recorded the statement of G Sampath Kumar, who deposed that bookie Uttam C Jain, alias Kitty, had told him about hotelier Vikram Agarwal arranging parties in Chennai for bookies and being in touch with CSK skipper MS Dhoni through team principal Gurunath Meiyappan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X