For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“24 மணி நேரமும் போதை” இங்கிலாந்து அணியை ஆட்டிப்படைக்கும் மதுபான கலாச்சாரம்.. ஆஷஸ் தோல்விக்கு காரணம்

மெல்பேர்ன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்குள் மது பழக்க கலாச்சாரம் அளவுக்கு மீறியுள்ளதாகவும், ஆஷஸ் தொடர் முழுவதுமே போதையில் இருந்ததாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Ashes Lossக்கு காரணம்? England Teamல் BOOZE culture | OneIndia Tamil

உலகின் மிகவும் பிரபலமான இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது.

இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இங்கிலாந்து அணி 4 - 0 என்ற கணக்கில் மிகவும் மோசமாக தோல்வியடைந்தது.

 இங்கிலாந்து அணியின் பரிதாபம்

இங்கிலாந்து அணியின் பரிதாபம்

முதல் டெஸ்டில், 9 விக்கெட்கள், 2வது டெஸ்டில் 275 ரன்கள் வித்தியாசம், 3வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசம், 5வது டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசம் என படுதோல்வியை சந்தித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி இவ்வளவு மோசமாக விளையாடி ரசிகர்கள் பார்த்தது இதுவே முதல்முறையாகும்.

 போதை கலாச்சாரம்

போதை கலாச்சாரம்

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் போதை கலாச்சாரம் தான் தோல்விக்கு முக்கிய காரணம் எனத்தெரியவந்துள்ளது. ஆஷஸ் தொடர் தொடங்கியது முதல் முடிந்தது வரை இங்கிலாந்து அணியில் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என அனைவரும் மதுபோதையிலேயே சுற்றித்திரிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அந்த அணியின் இயக்குநர் ஆஷ்லே கில்ஸ் தான் பகிரங்கமாக கூறியுள்ளார்.

 என்ன காரணம்

என்ன காரணம்

பயோ பபுள் வாழ்கைக்குள், பல்வேறு விதிமுறைகளுடன் இருக்கிறார்கள் என்பதால் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அதிகப்படியான மதுபானங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. போட்டியின் நடுவே கொடுக்கப்படும் இடைவெளியின் போது கூட, தண்ணீரை குடிப்பது போன்று மதுபானங்களை தான் அவர்கள் குடித்துள்ளனர்.

உருவ கேலி சர்ச்சை

உருவ கேலி சர்ச்சை

இதே போல அந்த அணிக்குள் உடல் உருவ கேலிகளும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீக நாட்களாக இங்கிலாந்து வீரர்கள் உடல் பருமன் ஆகியுள்ளனர். இதனால் அணி நிர்வாகமே அவர்களை கேலி செய்வதால், ஒல்லி ராபின்சன் போன்ற சில முக்கிய பவுலர்கள் உடற்தகுதி தேர்வுக்கு கூட செல்லவில்லை எனக்கூறப்பட்டுள்ளது.

வரலாற்றில் இல்லாத மோசம்

வரலாற்றில் இல்லாத மோசம்

இந்த பழக்கங்களால் இங்கிலாந்து அணி அழிவுப்பாதையை நோக்கி பயணித்து வருகிறது. இங்கிலாந்து அணி கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு பிஃப்ரவரியில் நடைபெற்ற இந்தியாவுடனான டெஸ்டில் தான் வெற்றி கண்டது. அதன்பின்னர் 14 போட்டிகளில் விளையாடி 10 டெஸ்டில் தோல்விகளை சந்தித்துள்ளது. வெறும் ஒரே ஒரு போட்டியில் தான் வெற்றி கண்டுள்ளது. கடந்த 25 வருடங்களில் இங்கிலாந்து அணியின் மிகவும் மோசமான ஆட்டம் இதுவாகும்.

Story first published: Tuesday, January 18, 2022, 16:16 [IST]
Other articles published on Jan 18, 2022
English summary
BOOZE culture is the main Reason behind England team's worst lose in ashes history
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X