For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி - ரோஹித் சர்மா இருவரில் யார் சிறந்த கேப்டன்.. “போங்கு” பதில் சொன்ன ஆஸி. வீரர்!

மும்பை : முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் இந்திய அணிக்கு யார் சிறந்த கேப்டனாக இருப்பார் என கருத்து கூறி உள்ளார்.

இந்திய அணியில் சமீபத்தில் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற பேச்சு அதிக அளவில் எழுந்து வருகிறது.

விராட் கோலியை டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக நியமித்து விட்டு ஒருநாள் அணிக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று சில ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

உலகக்கோப்பை செயல்பாடு

உலகக்கோப்பை செயல்பாடு

இதற்கு முக்கிய காரணம் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் அரையிறுதிச் சுற்றுடன் வெளியேறியது தான். கேப்டன் கோலி - பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எடுத்த சில முடிவுகள் விமர்சனத்துக்கு உள்ளானது.

கேப்டன் மாற்றம்

கேப்டன் மாற்றம்

இதனால், கேப்டனை மாற்ற வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. ரோஹித் சர்மா தற்காலிக கேப்டனாக இதுவரை சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இந்திய அணியை மாற்றி அமைத்து ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 2023 உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வட்டாரத்திலேயே சிலர் கூறி உள்ளனர்.

பிராட் ஹாக் கருத்து

பிராட் ஹாக் கருத்து

விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே யார் இந்திய அணிக்கு சிறந்த கேப்டனாக இருப்பார்கள் என்ற கேள்விக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் தனது கருத்தை கூறினார். இருவரையும் விட்டுக் கொடுக்காமல் அவர் பேசியுள்ளார்.

சிறந்த ஐபிஎல் கேப்டன்

சிறந்த ஐபிஎல் கேப்டன்

ரோஹித் சர்மாவை ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் என கூறி உள்ளார் பிராட் ஹாக். அதற்கு காரணம், ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் பல முறை இறுதிப் போட்டி வரை அணியை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், விராட் கோலி அவர் அளவுக்கு இறுதிப் போட்டிகளுக்கு அணியை அழைத்துச் செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த இந்திய அணி கேப்டன்

சிறந்த இந்திய அணி கேப்டன்

இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி தான் சிறந்த கேப்டன் என்று கூறி உள்ளார். அதற்கு காரணம், கோலி பேட்டிங், பீல்டிங் மற்றும் பயிற்சிகளில் அணியை முன் நின்று வழி நடத்திச் செல்கிறார். இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அவர் தான் அதிக உடற் தகுதி கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாற்றம் இருக்குமா?

மாற்றம் இருக்குமா?

ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் ரோஹித் சர்மா - விராட் கோலி கேப்டன்சி குறித்து விவாதம் செய்து வந்தாலும், பிசிசிஐ-யின் நகர்வுகளை பார்க்கும் போது இந்திய அணியில் இப்போதைக்கு கேப்டனை மாற்ற மாட்டார்கள் போலத் தெரிகிறது.

Story first published: Saturday, July 20, 2019, 19:59 [IST]
Other articles published on Jul 20, 2019
English summary
Brad Hogg chose Virat Kohli as best Indian team captain over Rohit Sharma
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X