சென்னை கல்லூரிகளில் மாணவிகளுடன் செம ஆட்டம் போட்ட பிராவோ- வீடியோ

சென்னை: தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளையொட்டி சென்னையில் முகாமிட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் வீரர் பிராவோ இன்று ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளுடன் நடனம் ஆடி பரவசப்படுத்தினார்.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவின் ஹைடன், மேற்கிந்திய தீவுகளின் பிராவோ, கிறிஸ் கெய்ல் ஆகியோர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். ஹைடன் அண்மையில் மதுரைக்கு வேட்டி கட்டி சென்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

வேட்டி கட்டி அசத்தல்

வேட்டி கட்டி அசத்தல்

பிராவோவும் ஹைடனும் நேற்று மைதானத்தில் வேட்டியுடன் களமிறங்கி வீரர்களிடம் பேட்டி எடுத்தனர். இந்த நிலையில் பிராவோவுன் கிறிஸ் கெய்லும் இன்று இணைந்து கொண்டார்.

வேலம்மாள் பள்ளியில்...

பிராவோ, கெய்ல் இருவரும் இன்று காலை வேலம்மாள் பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். இருவருக்கும் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

எஃப் எம்களில்...

பின்னர் பிராவோ ரேடியோ மிர்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதேபோல் கெய்ல், ஹலோ எஃபெம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

ஸ்டெல்லா மேரீஸில்

இதனைத் தொடர்ந்து பிராவோ சென்னை ஸ்டெல்லா மேரி மகளிர் கல்லூரிக்கு சென்றார். அங்கு மாணவிகளிடையே உரையாடினார். பின்னர் மாணவிகளுடன் இணைந்து நடனமாடினார். அப்போது ஒட்டுமொத்த மாணவிகளும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Dwayne Bravo dances with his female fans for Champion song at Stella Maris college.
Story first published: Tuesday, September 6, 2016, 16:24 [IST]
Other articles published on Sep 6, 2016
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X