For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"சூர்யா vs தேவா".. நேருக்கு நேர் மோதும் நண்பர்கள்.. நெருப்பை பற்ற வைத்த பிரட் லீ

சிட்னி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நட்புக்கெல்லாம் வேலை இல்லை என்று பிரட் லீ தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் 18ம் தேதி, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனில் தொடங்கவுள்ளது.

WTC Final 2021: இஷாந்த் விடுங்க.. சிராஜ் எடுங்க.. செம WTC Final 2021: இஷாந்த் விடுங்க.. சிராஜ் எடுங்க.. செம

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இப்போது போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டன் மைதான ஹோட்டலில் குவாராண்டைனில் உள்ளது. இன்னும் 3 அல்லது 4 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பயிற்சியைத் தொடங்குவார்கள்.

நெருங்கிய நண்பர்கள்

நெருங்கிய நண்பர்கள்

இந்த நிலையில், முதன் முறை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லப் போவது யார் என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், இந்திய அணியின் ஐஸ்ப்ரித் பும்ராவும், நியூசிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட்டும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், அவர்களின் நட்பு போட்டியின் தீவிரத்தை பாதிக்குமா என்ற பொதுவான கேள்வியும் எழுகிறது.

சீரியஸ் ரகம்

சீரியஸ் ரகம்

இருவரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடி வருபவர்கள். தினம் ஒன்றாக டிரஸ்ஸிங் ரூமில் பொழுதை கழித்தவர்கள். ஃபாஸ்ட் பவுலர்கள் என்பதால் வியூகம் வகுப்பது, நிறை குறைகளை பகிர்ந்து கொள்வது என்று இருவரின் பாண்ட் அதிகம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பும்ரா யாரிடமும் அதிகம் பேசாதவர். சக வீரர்கள் இவரைப் பற்றி காமெடி செய்தாலே, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளும் ரகம். இதனை முகமது ஷமி சமீபத்தில் ஒரு பேட்டியை கூறியிருந்தார்.

நட்புக்கு வேலை இல்ல

நட்புக்கு வேலை இல்ல

இந்த நிலையில் இவர்களின் நட்பு குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் டெரர் பாஸ்ட் பவுலர் பிரட் லீ கூறுகையில், "இருவருக்கும் இடையேயான நட்பு அப்படியே தான் இருக்கும். ஆனால், களத்தில் இறங்குவதற்கு முன்பும், இறங்கிய பின்பும் இருவரின் செயல்பாடுகளில் நீங்கள் மாற்றங்களை காணலாம். நீங்கள் களத்திற்குள் சென்றுவிட்டால், அது ஒரு போர். அந்த போரில் நீங்கள் உங்கள் நாட்டுக்காக சண்டையிடுகிறீர்கள். அது எப்போதும் மாறாது" என்கிறார்.

ஸ்விங், ஃபாஸ்ட்

ஸ்விங், ஃபாஸ்ட்

அதுமட்டுமின்றி, போல்ட்டும், பும்ராவும் தங்களது ப்ளஸ், மைனஸ் அறிந்தவர்கள். இருவரின் சாதக, பாதக அம்சங்கள் இருவருக்கும் தெரியும். உலக கிரிக்கெட்டுக்கு இந்த போட்டி மிகவும் சிறந்தது என்று நான் நினைக்கிறேன், நீங்கள் இந்த இரண்டு அற்புதமான வீரர்களைப் பார்க்கிறீர்கள், அவர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள். போல்ட் 140 கி.மீ. வேகத்தில் பந்தை திருப்பி விடுவார். ஜஸ்பிரீத் பும்ரா அந்த டியூக் பந்துகளை கொண்டு அனைத்து பகுதியிலும் ஸ்விங் செய்வார். இதனால், களம் கனலாக இருக்கும். அதேசமயம், போட்டி முடிந்த பிறகு இருவரும் கட்டித் தழுவிக் கொள்வதையும் பார்க்கலாம் என்று நான் நம்புகிறேன்" என்று லீ குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Saturday, June 5, 2021, 20:03 [IST]
Other articles published on Jun 5, 2021
English summary
Bret lee about bumrah, Boult friendship wtc final - பும்ரா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X