For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மனுசன் எப்படி பவுலிங் போட்டாலும் பயப்படவே மாட்டாரு.. இந்திய ஜாம்பவானை புகழ்ந்து தள்ளிய பிரெட் லீ!

சிட்னி : ஆஸ்திரேலிய அணி அதன் உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் மட்டும் அவர்களுக்கு எப்போதும் சிம்ம சொப்பனமாக இருந்தார்.

Recommended Video

Brett Lee praises VVS Laxman batting technique

அந்த பேட்ஸ்மேன் வேறு யாருமல்ல, சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படும் விவிஎஸ் லக்ஷ்மன்.

அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி, சிறந்த பேட்டிங் ரெக்கார்டை வைத்துள்ளார். அவரது பேட்டிங் உத்தி பற்றி ஆஸ்திரேலிய அணியின் பிரெட் லீ சமீபத்தில் புகழ்ந்தார்.

மனைவியுடன் சண்டை.. இந்திய அணியில் நீக்கம்.. 3 முறை தற்கொலை எண்ணம் வந்தது.. ஷாக் கொடுத்த இந்திய வீரர்மனைவியுடன் சண்டை.. இந்திய அணியில் நீக்கம்.. 3 முறை தற்கொலை எண்ணம் வந்தது.. ஷாக் கொடுத்த இந்திய வீரர்

இந்திய ஜாம்பவான்கள்

இந்திய ஜாம்பவான்கள்

2000 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் உலகை ஆட்சி செய்து வந்தது. அதே காலத்தில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியை புரட்டி எடுத்த கதைகள் நமக்கு தெரியும். ஆனால், அவர்களை ஆஸ்திரேலிய ஜாம்பவான் பந்துவீச்சாளர்க எளிதாக வீழ்த்தியதும் அதிகம்.

விரட்டி, விரட்டி வெளுத்த வீரர்

விரட்டி, விரட்டி வெளுத்த வீரர்

இதே காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை விரட்டி, விரட்டி வெளுத்த ஒரு வீரர் என்றால் அது விவிஎஸ் லக்ஷ்மன் தான். அவரது விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் எப்போதும் திணறினர். அதற்கு காரணம் அவரது பேட்டிங் உத்தி தான்.

மறக்க முடியாத ஆட்டம்

மறக்க முடியாத ஆட்டம்

லக்ஷ்மனின் பேட்டிங்கில் மறக்க முடியாத ஆட்டம் என்றால் அது கொல்கத்தா ஈடன் கார்டன் டெஸ்டில் அவர் 281 ரன்கள் குவித்தது தான். அந்த டெஸ்டில் ஃபாலோ ஆன் பெற்ற பிறகு அவர் இரட்டை சதம் அடித்து அணியை மீட்டார். இந்தியா அந்தப் போட்டியில் வென்றது.

அடிலெய்டு சதம்

அடிலெய்டு சதம்

2003இல் அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்தியா 85 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில், டிராவிட் இரட்டை சதம் அடிக்க, அப்போது லக்ஷ்மன் 143 ரன்கள் குவித்து அந்தப் போட்டியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

பேட்டிங் சராசரி

பேட்டிங் சராசரி

அந்த இரண்டு இன்னிங்க்ஸ் மட்டுமில்லாது, லக்ஷ்மன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 29 டெஸ்ட் போட்டிகளில் 2,434 ரன்கள் குவித்துள்ளார். அதில் அவரது பேட்டிங் சராசரி 49.61 ஆகும்.

ஒருநாள் போட்டி சராசரி

ஒருநாள் போட்டி சராசரி

டெஸ்டில் மட்டும் இல்லை, ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியை புரட்டி எடுத்துள்ளார் லக்ஷ்மன். அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 21 ஒருநாள் போட்டிகளில் 733 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 46.18 ஆகும்.

பிரெட் லீ என்ன சொன்னார்?

பிரெட் லீ என்ன சொன்னார்?

விவிஎஸ் ல்;லக்ஷ்மன் பற்றி சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் புகழ்ந்து தள்ளினார் பிரெட் லீ. sஅவர் பந்தை கண்டு பயப்படவே மாட்டார் என்றும், அவரது பேட்டிங் உத்தியை தாண்டி செல்ல முடியாது என்றும் கூறினார்.

பேட்டிங் உத்தி

பேட்டிங் உத்தி

"அவரது டெக்னிக்கை உடைப்பது மிகக் கடினம். அது அழகான டெக்னிக். பந்தை கண்டு பயப்படவே மாட்டார். அவருக்கு நிறைய நேரம் இருக்கும். மேலும், சிறந்த கால் நகர்வை கொண்டு இருந்தார்" என விவிஎஸ் லக்ஷ்மனின் பேட்டிங் உத்தி பற்றி கூறினார் பிரெட் லீ.

கவலைப்பட மாட்டார்

கவலைப்பட மாட்டார்

"அவரிடம் ஒரு விளையாட்டுத்தனம் உண்டு. பேட்ஸ்மேன்களிடம் இருக்கும் விளையாட்டுத்தனம் சில சமயம் கடினமானதாக இருக்கும். அவர்கள் யார் பந்து வீசுகிறார்கள், என்ன வேகத்தில் பந்து வருகிறது என கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்கள் பந்துவீச்சை எளிதாக அணுகுவார்கள். அது மோசமானதாக இருக்கும்" என்றார் பிரெட் லீ.

என்ன செய்வார் லக்ஷ்மன்?

என்ன செய்வார் லக்ஷ்மன்?

"விவிஎஸ்-க்கு எப்போது ஒருவரின் பந்துவீச்சை சமாளித்து ஆட வேண்டும் என்ற விஷயம் தெரியும். கடினமான நேரத்தை கடந்த பின்னர், அவர் அதை பயன்படுத்திக் கொள்வார். அவருக்கு பந்துவீசுவது வேடிக்கையாக இருக்கும்" என்றார் பிரெட் லீ.

Story first published: Sunday, May 3, 2020, 13:04 [IST]
Other articles published on May 3, 2020
English summary
Brett Lee praises VVS Laxman batting technique. He also explains how Laxman get through the Australian bowling line up when he was playing.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X