For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு சத்தியமா கொரோனா இல்லை... நம்புங்க.. வதந்தியை பரப்பாதீங்க.. லாரா வேண்டுகோள்

டெல்லி : கொரோனா வைரஸ் பரவலால் அனைவரும் கலக்கத்தில் உள்ள நிலையில், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று முன்னாள் மேற்கிந்திய கேப்டன் பிரையன் லாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரையன் லாராவிற்கு கொரோனா பாதித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று அவர் இன்ஸ்டாகிராம் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

Brian Lara tests negative for COVID-19

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை கொரோனா பாதிப்பு. இந்நிலையில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் வீரர் பிரையன் லாராவிற்கு கொரோனா பாதித்துள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.

ஷைகோ கேனான்.. காற்றில் மிதக்கும் கொரோனாவை அழிக்கும் நவீன மெஷின்.. ஐபிஎல்-இல் வேற லெவல் திட்டம்ஷைகோ கேனான்.. காற்றில் மிதக்கும் கொரோனாவை அழிக்கும் நவீன மெஷின்.. ஐபிஎல்-இல் வேற லெவல் திட்டம்

இதையடுத்து தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று லாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய சூழலில் இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வதந்தி மூலம் தன்னுடைய நலம் விரும்பிகள் மிகவும் பாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Brian Lara tests negative for COVID-19

இந்த வைரசுக்கு எதிராக அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, August 6, 2020, 16:46 [IST]
Other articles published on Aug 6, 2020
English summary
I hope and pray that all of us remain safe -Brian Lara
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X