For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேதார் ஜாதவை அணியிலிருந்து நீக்குங்க... ரெய்னாவை கொண்டு வாங்க.. கொந்தளித்த ரசிகர்கள்

அபுதாபி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடனான நேற்றைய போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்துள்ளது.

இந்த போட்டியில் விளையாடிய சிஎஸ்கே வீரர் கேதார் ஜாதவ் இறுதிக்கட்டத்தில் அடித்து ஆட வேண்டிய நிலையில் டாட் பந்துகளை அடித்து கொண்டிருந்தது சிஎஸ்கே ரசிகர்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு, ரெய்னாவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் டிவிட்டர் மூலம் சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் தோனியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 "பயப்படாத.. அப்படியே போடு".. தோனியை தூக்க தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்.. மைக்கில் பதிவான பிளான்

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே தோல்வி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சிஎஸ்கே இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கேவை 10 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி கொண்டுள்ளது. கடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில் இந்த போட்டியை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்திருந்தனர்.

ஜாதவ் மீது கொந்தளிப்பு

ஜாதவ் மீது கொந்தளிப்பு

இந்நிலையில் எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டியில் போராடி தோல்வி அடைந்துள்ள சிஎஸ்கேவின் தோல்விக்கு அணியில் சரியாக செயல்படாத கேதார் ஜாதவ் மீது அவர்கள் மிகுந்த கொந்தளிப்புடன் உள்ளனர். அவரை இன்னும் அணியில் வைத்திருப்பதற்கான காரணம் என்ன என்று சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் கேப்டன் தோனியிடம் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காரணம் குறித்து கேள்வி

காரணம் குறித்து கேள்வி

இறுதி ஓவரிலாவது ரன்களை கேதார் ஜாதவ் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே அளித்தார். ஜடேஜா, பிராவோ மற்றும் தாக்கூர் இவர்களுக்கு முன்னதாக ஜாதவை களமிறக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜாதவ் குறித்து மீம்ஸ்

ஜாதவ் குறித்து மீம்ஸ்

அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு ரெய்னாவை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து ஜாதவை வைத்து மீம்ஸ்களும் டிவிட்டர் தளங்களில் பறந்தன. கேதார் ஜாதவை டெஸ்ட் கிரிக்கெட்டின் கோச் பணிக்கு அனுப்பிவிட்டால் சிஎஸ்கேவிற்கு நல்லது என்றும் தெரிவித்துள்ளனர். அவரை பார்த்து சிஎஸ்கே ரசிகர்களே பயப்படுவதாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டன.

Story first published: Thursday, October 8, 2020, 10:42 [IST]
Other articles published on Oct 8, 2020
English summary
In the final over bowled by Andre Russell, Jadhav failed to rotate the strike
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X