For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிரிஸ்பேன்ல 4வது டெஸ்ட் கண்டிப்பா நடக்கும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி

சிட்னி : இந்தியா மற்றம் ஆஸ்திரேலியா இடையில் வரும் 15ம் தேதி 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

இங்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடுமையான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இங்கு 4வது போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

எங்க ஊருக்கு வா.. இடைவிடாத ஸ்லெட்ஜிங்.. அஸ்வின் கொடுத்த பதிலடி.. கப்சிப் ஆன ஆஸி. கேப்டன்.. செம பன்ச்எங்க ஊருக்கு வா.. இடைவிடாத ஸ்லெட்ஜிங்.. அஸ்வின் கொடுத்த பதிலடி.. கப்சிப் ஆன ஆஸி. கேப்டன்.. செம பன்ச்

இந்நிலையில், பிரிஸ்பேனின் காப்பாவில் திட்டமிட்டபடி 4வது போட்டி கண்டிப்பாக நடைபெறும் என்று கிரிக்கெட் ஆஸ்திரரேலியா உறுதிபட தெரிவித்துள்ளது.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி இந்த போட்டி துவங்கவுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் போட்டி நடைபெறுவது கேள்விக்குறியானது.

திட்டமிட்டபடி நடைபெறும்

திட்டமிட்டபடி நடைபெறும்

இந்நிலையில் 4வது போட்டி பிரிஸ்பேனில் திட்டமிட்டபடி நடக்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இடைக்கால சிஇஓ நிக் ஹாக்லி உறுதிப்படுத்தியுள்ளார். இதையொட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பிரிஸ்பேனிற்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

முகக்கவசம் கட்டாயம்

முகக்கவசம் கட்டாயம்

ஆனால் கொரோனா விதிமுறைகளை கவனத்தில் கொண்டு போட்டியின்போது 50 சதவிகித ரசிகர்களே மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் முகக்கவசம் முக்கியம் என்றும் குயின்ஸ்லாந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவை ஒட்டி பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டிருந்த 3 நாள் லாக்டவுன் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

பிசிசிஐ கோரிக்கை

பிசிசிஐ கோரிக்கை

முன்னதாக பிரிஸ்பேனில் இந்திய வீரர்களுக்கு கடுமையான குவாரன்டைன் விதிமுறைகள் விதிக்கப்படக் கூடாது என்றும், உணவு பரிமாறப்படும் இடங்களில் அவர்கள் சுதந்திரமாக நடமாட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 11, 2021, 14:02 [IST]
Other articles published on Jan 11, 2021
English summary
The Queensland government has decided to reduce the crowd capacity to 50 per cent
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X