For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பௌலிங் அட்டாக்ல பும்ராதான் 'தல'... அவர்தான் அதிக பொறுப்பை ஏத்துக்கணும்... சச்சின் அறிவுறுத்தல்

மும்பை : இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வரும் 7ம் தேதி துவங்கவுள்ளது.

இதையடுத்து சிட்னிக்கு இந்திய அணியின் வீரர்கள் இன்று பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நியாயமே இல்லை.. எங்களை விலங்கு போல நடத்தாதீர்கள்.. கொதித்தெழுந்த பிசிசிஐ.. அதிர வைத்த சம்பவம்! நியாயமே இல்லை.. எங்களை விலங்கு போல நடத்தாதீர்கள்.. கொதித்தெழுந்த பிசிசிஐ.. அதிர வைத்த சம்பவம்!

இந்நிலையில் பௌலிங் அட்டாக்கிற்கு பும்ராதான் தலைவர் என்றும் அவர் தான் அதிக பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சிட்னிக்கு வீரர்கள் பயணம்

சிட்னிக்கு வீரர்கள் பயணம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் 7ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி இரு அணிகளும் இன்று சிட்னிக்கு தங்களது பயணங்களை துவ ங்கியுள்ளனர்.

அதிரடி கிளப்பிய பௌலர்கள்

அதிரடி கிளப்பிய பௌலர்கள்

நடந்து முடிந்துள்ள இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங்கை காட்டிலும் பௌலிங் சிறப்பாக காணப்பட்டது. குறிப்பாக அஸ்வின், புஜாரா உள்ளிட்ட ஸ்பின்னர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினர். கடந்த போட்டியின்மூலம் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய முகமது சிராஜூம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றுள்ளார்.

அதிக பொறுப்பை ஏற்கவேண்டும்

அதிக பொறுப்பை ஏற்கவேண்டும்

கடந்த 2 போட்டிகளிலும் சேர்த்து பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இந்நிலையில் இந்திய பௌலிங் அட்டாக்கிற்கு தலைவர் என்றால் அது ஜஸ்பிரீத் பும்ரா தான் என்றும் அவர்தான் அதிகமான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உணர்ந்து செயல்பட வேண்டும்

உணர்ந்து செயல்பட வேண்டும்

போட்டியின் நிலைத்தன்மை குறையும்போது, பும்ரா தனது கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த சூழலை சிறப்பாக கையாள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுதான் உண்மையான சாம்பியன் பௌலருக்கான குணாதிசயம் என்றும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, January 4, 2021, 14:32 [IST]
Other articles published on Jan 4, 2021
English summary
Whenever the chips are down, Bumrah has pushed himself harder -Sachin Tendulkar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X