For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்பா சாமி..? வாழ்க்கையில் பும்ரா மாதிரி ஒரு பவுலரை பார்த்ததே இல்ல... பாராட்டும் அந்த வீரர்

Recommended Video

IPL 2019:Bumrah injury update | பும்ராவுக்கு காயம் சரியாயிடுச்சாம்: மும்பை நிர்வாகம்

மும்பை:எத்தனையோ பவுலர்களை எதிர்கொண்டு ஆடியிருக்கிறேன், ஆனால் பும்ராவை போன்றதொரு பவுலரை எதிர்கொண்டதேயில்லை என்று உலகின் சிறந்த பேட்ஸ் மேன்களில் ஒருவரான டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிரான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 187 ரன்களை குவித்தது.

188 ரன்கள் என்பது வெற்றிக்கான இலக்கு. அந்த போட்டியில் ஆர்சிபி வீரர் டி வில்லியர்ஸ் கடைசிவரை களத்தில் இருந்தார். ஆனாலும் அவரை பெரிய ஷாட்டுகளை அடிக்கவிடாமல், கடைசி 2 ஓவர்களில் அவரை கட்டுப்படுத்தியவர் பும்ரா.

மேட்ச் பிக்ஸிங்? வாயைக் கொடுத்து வம்பில் சிக்கிய ரிஷப் பண்ட்டை.. கையும் களவுமாக பிடித்த ரசிகர்கள்!! மேட்ச் பிக்ஸிங்? வாயைக் கொடுத்து வம்பில் சிக்கிய ரிஷப் பண்ட்டை.. கையும் களவுமாக பிடித்த ரசிகர்கள்!!

மும்பைக்கு வெற்றி

மும்பைக்கு வெற்றி

அந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 181 ரன்களில் சுருட்டி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. 188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி, 16 ஓவர் முடிவில் 147 ரன்களை எட்டியது.

41 ரன்கள் தேவை

41 ரன்கள் தேவை

அடுத்து வரக்கூடிய 4 ஓவர்களில் 41 ரன்கள் தேவை. மைதானத்தில் இரு அணிகளுக்கும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. அந்த நிலையில் 17வது ஓவரை வீசினார் பும்ரா. அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

கடைசி 2 ஓவர்கள்

கடைசி 2 ஓவர்கள்

ஹெட்மயரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஹர்திக் வீசிய 18வது ஓவரில் 18 ரன்கள் குவிக்கப்பட்டது. இதையடுத்து கடைசி 2 ஓவரில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மீண்டும் பும்ராவுக்கு கூடுதல் நெருக்கடி.

5 ரன்கள் எடுக்க முடிந்தது

5 ரன்கள் எடுக்க முடிந்தது

அந்த ஓவரை வீசிய பும்ரா, டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தும்கூட, அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதன் பின்னர் கடைசி ஓவரில் ஆர்சிபி அணியை 17 ரன்கள் அடிக்கவிடாமல் மலிங்கா தடுக்க, மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி வில்லியர்ஸ் பாராட்டு

டி வில்லியர்ஸ் பாராட்டு

இந்நிலையில், பும்ராவின் திறமையை டி வில்லியர்ஸ் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக, பிரபல ஆங்கில நாளிதழுக்கு அவர் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பும்ரா முதலிடம்

பும்ரா முதலிடம்

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பும்ரா தான் முதலிடத்தில் இருக்கிறார். மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசியில் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.

ரொம்ப திண்டாடிவிட்டேன். எல்லா பெருமையும் பும்ராவுக்குத்தான் சென்று சேரும்.

துணிச்சல்மிக்கவர்

துணிச்சல்மிக்கவர்

அருமையான திறமையை பெற்றவர் பும்ரா. சின்னசாமி மைதானத்தில் எத்தனையோ பவுலர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் பும்ராவை போல ஒரு பவுலரை பார்த்தேயில்லை. பும்ரா துணிச்சல்மிக்கவர். நெருக்கடியான நேரத்தில் உறுதியாக இருந்து சிறப்பாகவும் தெளிவாக விளையாடுபவர் என்று டிவில்லியர்ஸ் கூறி இருக்கிறார்.

Story first published: Sunday, March 31, 2019, 15:30 [IST]
Other articles published on Mar 31, 2019
English summary
South African batting great A B de Villiers has described Jasprit Bumrah as a bowler with “special skills” who has the ability to “stick to plans” in high pressure situations.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X