For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நான் குணமடைந்தவுடன்.. அதுதான் முதல் பணி” இந்திய அணியில் இருந்து விலகல்.. ஜஸ்பிரித் பும்ரா உருக்கம்

மும்பை: இந்திய அணியில் இருந்து விலகியது குறித்து ஜஸ்பிரித் பும்ரா உருக்கமான கருத்தை பதிவிட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

நேரம் நெருங்கி வரும் சூழலில் இந்திய அணிக்கு ஒரு பெரும் அதிர்ச்சியாக வந்துள்ளது ஜஸ்பிரித் பும்ராவின் விலகல்.

 ஆட்டம் க்ளோஸ்.. பும்ரா விவகாரத்தில் பிசிசிஐ ஆடிய கபட நாடகம்.. உண்மை தகவல் வெளியானது?? ஆட்டம் க்ளோஸ்.. பும்ரா விவகாரத்தில் பிசிசிஐ ஆடிய கபட நாடகம்.. உண்மை தகவல் வெளியானது??

பிசிசிஐ எடுத்த ரிஸ்க்

பிசிசிஐ எடுத்த ரிஸ்க்

முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காய பாதிப்பு காரணமாக அவர் டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி வீரரான அவரை எப்படியாவது விளையாட வைக்க வேண்டும் என பிசிசிஐ பெரும் ரிஸ்க்-களை எடுத்தது. அதாவது முதல் சில போட்டிகளில் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டால், அரையிறுதிக்குள் கம்பேக் கொடுப்பார் என கணக்கிட்டது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

ஆனால் அவரின் உடல்நிலை அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை எனத் தெரிகிறது. ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் சரியாவதற்கு குறைந்தது 4 - 5 வாரங்கள் ஆகுமாம். இதனை முடித்துவிட்டு நேரடியாக முக்கிய போட்டிகளில் விளையாடுவது சாதாரணம் அல்ல. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வேறு வழியின்றி வெளியேற்றப்பட்டுள்ளார்.

பும்ரா பதிவு

பும்ரா பதிவு

இந்நிலையில் இதுகுறித்து பும்ரா உருக்கமாக பேசியுள்ளார். அதில், இந்த முறை டி20 உலகக்கோப்பையில் நான் இல்லாதது மன வேதனையாக உள்ளது. எனது நலனுக்காக வாழ்த்திய அனைவருக்கும் மிகவும் நன்றி. நான் குணமடைந்தவுடன் இந்திய அணியை உற்சாகப்படுத்த நிச்சயம் அவர்களுடன் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரரை தேடும் பணியில் பிசிசிஐ மும்முரம் காட்டி வருகிறது. தற்போதைக்கு முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் தீபக் சஹார் ஆகிய மூவர் குறித்து நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், ஷமிக்கு வாய்ப்பு கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Tuesday, October 4, 2022, 13:57 [IST]
Other articles published on Oct 4, 2022
English summary
Team India pacer Bumrah emotional Post after ruled out from T20 world cup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X