For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிக்கெட்டில் சச்சின் படத்தைப் போடலாமா.. அனுமதி கேட்கும் பெங்கால் கிரிக்கெட் சங்கம்

கொல்கத்தா: சச்சின் டெண்டுல்கர் ஆடும் 199வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டில் சச்சினின் புகைப்படத்தை இடம் பெறச் செய்வது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பெங்கால் கிரிக்கெட் சங்கம் அனுமதி கேட்டுள்ளது.

சச்சின் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவுள்ளார். இந்த டெஸ்ட் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அதற்கு முன்பு தனது 199வது டெஸ்ட் போட்டியில் அவர் கொல்கத்தாவில் ஆடவுள்ளார். இந்தப் போட்டிக்கான டிக்கெட்டில், சச்சினின் படத்தை அச்சிட பெங்கால் கிரிக்கெட் சங்கம் தீர்மானித்துள்ளது. பிசிசிஐயின் அனுமதியையும் அது கோரியுள்ளது. அக்டோபர் 25ம் தேதி டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

முதல் முறையாக

முதல் முறையாக

இதுவரை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டில் எந்த ஒரு வீரரின் படமும் பிரசுரிக்கப்பட்டதில்லை. எனவே சச்சின் படத்தை போடுவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை பெங்கால் கிரிக்கெட் சங்கம் கோரியுள்ளது.

நவம்பர் 6 முதல் 10ம் தேதி வரை

நவம்பர் 6 முதல் 10ம் தேதி வரை

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 6ம் தேதி சச்சினின் 199வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 10ம் தேதி வரை நடைபெறும். இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இந்தப் போட்டி நடைபெறுகிறது.

உணர்ச்சிகரமான போட்டி

உணர்ச்சிகரமான போட்டி

இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்க செயலாளர் சுபீர் கங்குலியும், பொருளாளர் பிஸ்வரூப் தேயும் கூறுகையில், இது உணர்ச்சிகரமான தருணம். சச்சின் ஆடப் போகும் கடைசிப் போட்டிக்கு முந்தைய போட்டி இது.எனவே டிக்கெட்டில் அவரது புகைப்படத்தை இடம் பெறச் செய்ய விரும்புகிறோம். இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளோம் என்றார்.

ரசிகர்களுக்கு நினைவுச் சின்னமாக அமையும்

ரசிகர்களுக்கு நினைவுச் சின்னமாக அமையும்

மேலும் அவர்கள் கூறுகையில், இது ரசிகர்களுக்கும் பிடிக்கும். சச்சின் கொல்கத்தாவில் ஆடிய கடைசிப் போட்டி என்ற பெருமையுடன்அவர்கள் இந்த டிக்கெட்டை பாதுகாத்துக் கொள்ள உதவும் என்றார்கள்.

25ம் தேதி விற்பனை

25ம் தேதி விற்பனை

கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை அக்டோபர் 25ம் தேதி தொடங்குகிறது. சச்சின் கொல்கத்தாவில் ஆடப் போகும் கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே டிக்கெட்கள் படு வேகமாக விற்றுத் தீரும் என்று தெரிகிறது.

5 சதவீதம் ஆன்லைனில் விற்பனை

5 சதவீதம் ஆன்லைனில் விற்பனை

மொத்தம் 68,000 சீட்களுக்கான டிக்கெட்கள் விற்பனை செய்யப்படும். இதில் 5 சதவீத டிக்கெட்கள் அதாவது 4000 டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும்.

ஓசி டிக்கெட்கள் 30,000

ஓசி டிக்கெட்கள் 30,000

மீதமுள்ள 30,000 சீட்களை கிரிக்கெட் சங்க ஆயுட்கால உறுப்பினர்கள், வருடாந்திர உறுப்பினர்கள், கெளரவ உறுப்பினர்கள் என ஓசி கிராக்கிகளுக்கு ஒதுக்கி வைத்துள்ளனராம்.

Story first published: Friday, October 18, 2013, 12:09 [IST]
Other articles published on Oct 18, 2013
English summary
The Cricket Association of Bengal (CAB) will be seeking permission of the Indian Cricket Board so that they can have a photograph of Sachin Tendulkar on match ticket that will be printed on the occasion of penultimate Test of the legendary batsmans illustrious career.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X