For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினுக்கு "செக்".. சர்வதேச வீரர்களே தொட முடியாத "உயரம்".. நெருங்கும் மிதாலி ராஜ்

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க மிதாலி ராஜுக்கு அருமையான வாய்ப்பு சிக்கியுள்ளது. தொடர்ந்து அவர் கன்சிஸ்டண்ட் காட்டும் பட்சத்தில் இந்த அரிய சாதனை நிகழ்த்தப்படலாம்.

இந்தியாவில் கிரிக்கெட்டும் ஒரு மதம் என்று ரசிகர்கள் கொண்டாடினாலும், ஆண்கள் அணிக்கு இருக்கும் கிரேஸ், பெண்கள் அணிக்கு கிடையாது. இது சாபமா என்று கூட தெரியவில்லை.

இரு அணிகளுமே கிரிக்கெட் தான் ஆடுகின்றன. ஆனால், ஆண்கள் அணிக்கு கிடைக்கும் மரியாதையும் வரவேற்பும் ஏன் பெண்களுக்கு அணிக்கு கிடைக்கவில்லை. அங்கும் எண்ணற்ற சாதனை புரிந்த வீராங்கனைகள் உள்ளனர். ஆனால், அவர்களால் கூட இம்பேக்ட் ஏற்படுத்த முடியவில்லை.

 சாதனை மறுபக்கம்

சாதனை மறுபக்கம்

ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் ஒருபக்கம் இருந்தாலும், தனிப்பட்ட விதத்தில் பெண்கள் அணியில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த வீராங்கனைகளில் முக்கியமானவர் மிதாலி ராஜ். மிதாலி ராஜ்.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பொக்கிஷம். 38 வயதாகும் மிதாலி 1999ல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமாகிறார். இப்போது வருடம் 2021, ஜூன் மாதம்.

 அசாத்திய சாதனை

அசாத்திய சாதனை

இந்த நிமிடம், இந்த நொடி அவர் இங்கிலாந்தின் பிரிஸ்டோலில் இருக்கிறார். அதுவும் இந்திய அணியின் கேப்டனாக. 1999ல் இந்திய அணியில் அறிமுகமானவர், இப்போதும் கேப்டனாக அணியில் நீடிக்கிறார் என்றால், அது எத்தகைய பெரிய சாதனை தெரியுமா? இந்த 20 வருட காலத்தில் அவரது மார்க்கெட் காலியாகி இருந்திருக்க வேண்டும். ஆனால், இன்னமும் தனது அசாத்திய அப்படியே அதனை ஹோல்ட் செய்து வைத்திருக்கிறார்.

 22 ஆண்டுகள்

22 ஆண்டுகள்

மொத்தம் 214 ஒருநாள் போட்டிகள். 7,098 ரன்கள். பேட்டிங் ஆவரேஜ் 51. 06. இன்னும் இன்னும் பல வியத்தகு சாதனைகளை தன் லிஸ்டில் வைத்திருக்கிறார். இப்போது மேலும் ஒரு மகுடமாக, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக நாட்கள் விளையாடிய வீரர்கள் பட்டியலில், ஒரு வீராங்கனையாக டாப் 5 லிஸ்டில் இருக்கிறார் மிதாலி. ஆம்! இங்கிலாந்துக்கு எதிராக அவர் வரும் ஜூன் 27ம் தேதி விளையாடப் போகும் முதல் ஒருநாள் போட்டி தினத்தன்று, அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில் 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

 புதிய சாதனை

புதிய சாதனை

அதுமட்டுமல்ல, அடுத்த நான்கு மாதத்தில், உலகிலேயே அதிக நாட்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் மிதாலி ராஜ் தகர்க்கவிருக்கிறார்.

22 ஆண்டுகள், 91 நாட்கள் - சச்சின்

21 ஆண்டுகள், 184 நாட்கள் - ஜெயசூர்யா

21 ஆண்டுகள், 00 * நாட்கள் - மிதாலி ராஜ்

20 ஆண்டுகள், 288 * நாட்கள் - க்றிஸ் கெயில்

20 ஆண்டுகள், 272 நாட்கள் - ஜாவித் மியாண்டட்

அப்படி போடு.. கலக்குங்க மிதாலி!

Story first published: Friday, June 4, 2021, 21:08 [IST]
Other articles published on Jun 4, 2021
English summary
can mithali raj break sachin tendulkar record - மிதாலி ராஜ்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X