For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாளை முதல் "சூப்பர் 10"... வரலாறு படைப்பாரா டோணி.. இரட்டைச் சாதனை படைக்குமா இந்தியா?

நாக்பூர்: இந்திய கிரிக்கெட் அணிக்கும், அதன் கேப்டன் டோணிக்கும் நாளைய தினம் புதிய வரலாறு படைப்பதற்கான தொடக்க தினமாக அமையும் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். உலகக் கோப்பை டி 20 போட்டித் தொடரில் நாளை முதல்தான் முக்கியப் போட்டிகள் தொடங்குகின்றன.

நாளை நாக்பூரில் நடைபெறும் முதல் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதவுள்ளன. தகுதிச் சுற்றுப் போட்டிகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி நடந்தது. தற்போது அதிலிருந்து ஆப்கானிஸ்தானும், வங்கதேசமும் சூப்பர் 10 பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்தியாவில் போட்டிகள் நடந்தால் நிச்சயம் அது இந்திய அணிக்கு கூடுதல் நெருக்கடியை இயல்பாகத் தரும். காரணம், எதிர்பார்ப்புகள் சற்று ஓவராகவே இருக்கும் என்பதால். அந்த வகையில் இந்தத் தொடரை இந்தியா வெல்லும் என்று ஏற்கனவே பலரும் கூறி வருவதால், இந்தியாவுக்கு ரொம்பவே நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

செம பார்ம்

செம பார்ம்

சமீப காலமாக டி 20 போட்டிகளில் இந்தியா மிகச் சிறப்பாக ஆடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த நாட்டு அணியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வெள்ளை அடித்தது. பின்னர் இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. அடுத்து உச்சகட்டமாக வங்கதேசத்தில் நடந்த ஆசியாக் கோப்பையை இந்தியா தட்டிச் சென்றது.

2வது பிரிவில்

2வது பிரிவில்

தற்போது உலகக் கோப்பைப் போட்டி வந்து விட்டது. இதில் 2வது பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் இந்தியா இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து 2 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

காத்திருக்கும் வரலாறு

காத்திருக்கும் வரலாறு

இந்திய அணி இந்தத் தொடரை வென்றால் அது அணிக்கும், கேப்டன் டோணிக்கும் புதிய வரலாறாக மாறும். எந்த அணியும் இதுவரை டி 20 உலகக் கோப்பையை 2 முறை வென்றதில்லை. அதுவும் சொந்த ஊரில் எந்த அணியும் டி 20 உலகக் கோப்பையை வென்றதில்லை.

5 சாம்பியன்கள்

5 சாம்பியன்கள்

முதல் கோப்பையை இந்தியா வென்றது. அதற்கு அடுத்த கோப்பைகளை பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை ஆகியவை வென்றுள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் முதல் கோப்பை

தென் ஆப்பிரிக்காவில் முதல் கோப்பை

இந்தியா 2007ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதல் டி 20 உலகக் கோப்பையை தட்டி வந்தது. அதன் பிறகு இப்போது சொந்த ஊரில் போட்டி நடைபெறுவதால் மீண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன.

அடுத்த வாய்ப்பு குறைவுதான்

அடுத்த வாய்ப்பு குறைவுதான்

அடுத்து 2020ல் ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பைப்போட்டிகள் நடைபெறவுள்ளன.அதுவரை டோணி கேப்டனாக இருப்பாரா என்பது சந்தேகம். மேலும் அந்த கோப்பையை நம்மால் வெல்ல முடியும் என்றும் உறுதியாக கூற முடியாது.

சாதனையுடன்

சாதனையுடன்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து டோணி ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று விட்டார். டி 20 உலகக் கோப்பையையும் 2வது முறையாக வென்றெடுத்து புதிய சாதனையுடன், பெருமையுடன் கிரிக்கெட்டிலிருந்து டோணி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக ஒரு பேச்சு உள்ளது.

2011ல் சாதனை

2011ல் சாதனை

கடைசியாக இந்தியாவில் நடந்த ஐசிசி போட்டி 2011ல் நடந்த ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியாகும். அதில் இந்தியா, அபாரமாக வென்று கோப்பையை 2வது முறையாக தட்டிச் சென்றது. அதன் பிறகு இந்த உலகக் கோப்பைப் போட்டி வந்துள்ளது.

இந்தியாவின் போட்டிகள்

இந்தியாவின் போட்டிகள்

டி 20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா நாளை நியூசிலாந்துடன் முதல் போட்டியில் மோதுகிறது. அடுத்து 19ம் தேதி பாகிஸ்தான், 23ம் தேதி வங்கதேசம், 27ம் தேதி ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் இந்தியா மோதவுள்ளது. அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு ஏழரை மணிக்குத் தொடங்கும்.

Story first published: Monday, March 14, 2016, 14:02 [IST]
Other articles published on Mar 14, 2016
English summary
Tomorrow (March 15) could be the start of a historic journey for India and their captain Mahendra Singh Dhoni at the Vidarbha Cricket Association (VCA) Stadium. On Tuesday, India open their World Twenty20 2016 campaign against New Zealand. Though World T20 began (Qualifying Stage) on March 8, the real tournament commences tomorrow with the Super 10s.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X