சர்வதேச அளவில பென் ஸ்டோக்ஸ் திறமைக்கு சமமா எந்த வீரரும் இல்ல.. கவுதம் கம்பீர்

டெல்லி : இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சுக்கு சமமாக தற்போதைய சூழலில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை என்று முன்னாள் இந்திய துவக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ENG VS WI 3RD TEST , DAY 3 | England closing in on series victory

கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிகாக பேசிய கவுதம் கம்பீர், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் பென் ஸ்டோக்சுக்கு சமமாக யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இங்கிலாந்து அணி தற்போது மோதிவரும் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் பென் ஸ்டோக்ஸ் 176 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் அவுட்டாகாமல் 78 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு காரணமானார்.

வெற்றியை தீர்மானிக்கும் 3வது போட்டி

வெற்றியை தீர்மானிக்கும் 3வது போட்டி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 மாதங்களாக முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் கடந்த 8ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றியை பெற்று இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளன. இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் 3வது போட்டி நடைபெற்று வருகிறது.

வெற்றிக்கு காரணமான பென் ஸ்டோக்ஸ்

வெற்றிக்கு காரணமான பென் ஸ்டோக்ஸ்

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 176 ரன்களும் இரண்டாவது போட்டியில் அவுட் ஆகாமல் 78 ரன்களும் அடித்து பென் ஸ்டோக்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

இந்திய வீரர்கள் சமமாக முடியாது

இந்திய வீரர்கள் சமமாக முடியாது

இந்நிலையில் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்சுக்கு இந்திய வீரர்கள் யாரும் சமமாக முடியாது என்றும் யாரையும் பென் ஸ்டோக்சுடன் கம்பேர் பண்ண கூட முடியாது என்று முன்னாள் இந்திய அணியின் துவக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய அவர், இந்தியாவில் மட்டுமின்றி உலக தரத்திலும் பென் ஸ்டோக்சுக்கு இணையாக யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்திய வீரர்கள் அளிக்கவில்லை

இந்திய வீரர்கள் அளிக்கவில்லை

டெஸ்ட் போட்டிகளில், ஒருநாள் போட்டிகளில் மற்றும் டி20 போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் அளித்துள்ள பங்களிப்பு போன்று இந்திய அணியில் எந்த வீரரும் அளிக்கவில்லை என்றும், ஒவ்வொரு அணியிலும் இத்தகைய வலிமையான திறமையான வீரர் அவசியம் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்சை போல விளையாட வீரர்கள் அனைவரும் விரும்பினாலும் தற்போதைய சூழலில் அவரை போன்று யாரும் இல்லை என்பதே உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
You can't compare anyone in India at the moment with Ben Stokes -Gambhir
Story first published: Sunday, July 26, 2020, 17:09 [IST]
Other articles published on Jul 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X