தோனி, சாக்ஷி, ஜிவா கலக்கல் நடனம்... விசில் போட்டு பதிவிட்ட சிஎஸ்கே... எப்படி ஆடுறாருன்னு பாருங்க!

ராஞ்சி : முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் கலக்கல் நடனத்தை சிஎஸ்கே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ள்ளது.

அந்த வீடியோவில் அவருடன் இணைந்து அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி மற்றும் மகள் ஜிவாவும் நடனமிடுகின்றனர்.

மேலும் தோனி தனியாக மற்ற நண்பர்களுடனும் இணைந்து நடனமிடும் வகையில் அந்த வீடியோ உள்ளது.

முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் ஐபிஎல்லில் சிஎஸ்கே கேப்டனுமான எம்எஸ் தோனி, சாதாரணமாக வெளி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால் பார்ட்டி ஒன்றில் அவர் தனது மனைவி சாக்ஷி மற்றும் மகளுடன் கலந்து கொண்டு நடனமாடிய கலக்கல் வீடியோவை சிஎஸ்கே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் நடனமிடும் தோனி தொடர்ந்து தன்னுடைய நண்பர்களுடனும் நடனமாடுகிறார். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சிஎஸ்கே அணி, இந்த வீடியோவை பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
MS Dhoni Dancing Video With Sakshi and Ziva, CSK posts
Story first published: Thursday, November 26, 2020, 15:28 [IST]
Other articles published on Nov 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X