For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த கேப்டன் மட்டுமே ஒழுங்கா ஆடியிருந்தா..? உலக கோப்பையில் எங்க லெவலே வேற..!

டாக்கா: கேப்டன் ஒழுங்காக ஆடாத காரணத்தால் எங்கள் அணி உலக கோப்பையில் தோற்று விட்டோம் என்று வங்கதேசத்தின் ஸ்டார் வீரர் ஷகிப் அல் ஹசன் பரபரப்பு குற்றச்சாட்டை வீசியிருக்கிறார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் வங்கதேச ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் 9 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுக்களுடன் 606 ரன்கள் குவித்தார். அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அவர் 3வது இடம்.

ஆனாலும், மற்றவர்கள் போட்டியின் போது சொதப்பி தள்ளினர். விளைவு, புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அணியின் தோல்வி அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் விவாத பொருளாக மாறியது. வீரர்கள் ஆளாளுக்கு குற்றம் சொல்ல ஆரம்பித்தனர்.

அப்ப இனிமே இந்திய அணிக்கு ஆடவே முடியாதா? அடி மேல் அடி.. விஜய் ஷங்கருக்கு மட்டும் ஏன் இப்படி?அப்ப இனிமே இந்திய அணிக்கு ஆடவே முடியாதா? அடி மேல் அடி.. விஜய் ஷங்கருக்கு மட்டும் ஏன் இப்படி?

பரபரப்பு குற்றச்சாட்டு

பரபரப்பு குற்றச்சாட்டு

இப்போது அணியின் தோல்விக்கு முழு பொறுப்பு கேப்டன் மோர்டாசா என்று ஷகிப் அல் ஹசன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:

நம்பினேன்

நம்பினேன்

உலக கோப்பையில் நீண்ட தூரம் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும். அந்த விஷயத்தை நான் உறுதியாக நம்பினேன்.

செயல்பாடு எப்படி?

செயல்பாடு எப்படி?

உலக கோப்பையில் நாங்கள் நினைத்தபடி எந்த விஷயங்களும் நடக்கவில்லை. ஒரு வீரர் சிறப்பாக விளையாடாத போது, அணி எப்படி விளையாடியது என்பதை காட்டிலும், தன்னுடைய செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

கேப்டன் தான் பிரச்னை

கேப்டன் தான் பிரச்னை

இது உலக கோப்பையின்போது எங்களுக்கு பிரச்சனையாகி உருவெடுத்தது. இதே விஷயம் மோர்டாசாவுக்கும் நடந்தது. கேப்டன் சிறப்பாக விளையாடாத போது, அவருக்கும் பிரச்சனை. அப்புறம் அணிக்கும் பிரச்சனை. கேப்டன் சிறப்பாக விளையாட வேண்டும். வேறு வழியே கிடையாது என்றார்.

Story first published: Saturday, August 31, 2019, 14:16 [IST]
Other articles published on Aug 31, 2019
English summary
Captain mortaza performance got issued during world cup, says bangladesh player shakib al hasan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X