For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆளுக்கு 5 மேட்ச் தரேன்.. அதுக்குள்ள ஆடுங்க.. கேப்டன் கோலி கறார்.. அதிர வைக்கும் திட்டம்!

Recommended Video

Kohli planning for T20 world cup

தரம்சாலா : இந்திய வீரர்களுக்கு ஐந்து போட்டிகள் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். அதற்குள் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும் என கறாராக கூறி இருக்கிறார் கேப்டன் கோலி.

இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வரும் நிலையில், கேப்டன் விராட் கோலி உலகக்கோப்பை அணியை இறுதி செய்ய என்ன திட்டம் என்பது பற்றி பிசிசிஐ-க்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

IND vs SA : பெரும் ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்.. 50 நிமிடத்தில் முதல் டி20 ரத்து!IND vs SA : பெரும் ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்.. 50 நிமிடத்தில் முதல் டி20 ரத்து!

உலகக்கோப்பை டி20

உலகக்கோப்பை டி20

50 ஓவர் உலகக்கோப்பை முடிந்த நிலையில், அனைத்து அணிகளின் பார்வையும் 2020இல் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை மீது பதிந்துள்ளது. இந்திய அணியும் அதற்கான ஏற்பாடுகளில் இப்போது இருந்தே தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்த உலகக்கோப்பை போச்சு

இந்த உலகக்கோப்பை போச்சு

50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறி பின் தோல்வி அடைந்தது. அதனால், கடும் விமர்சனத்தை சந்தித்த இந்திய அணி, டி20 உலகக்கோப்பையை விடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது.

அணி முக்கியம்

அணி முக்கியம்

அதற்கு இப்போது இருந்தே சிறப்பான அணியை தயார் செய்வது அவசியம். அதற்கான பணிகளை வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்தே தொடங்கி விட்டது இந்திய அணி நிர்வாகம். ஐபிஎல்-இல் கலக்கிய இளம் வீரர்களில் பலருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

30 போட்டிகள்

30 போட்டிகள்

டி20 உலகக்கோப்பை தொடர் 2020இல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு முன் இந்திய அணி 30 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதற்குள் இந்திய அணியை தயார் செய்ய வேண்டும்.

கோலி என்ன சொன்னார்?

கோலி என்ன சொன்னார்?

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை திட்டம் குறித்து பேசிய கோலி, "நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஒருவர் 30 வாய்ப்புகளையும் பெற்றுவிட முடியாது. நான் அணிக்குள் வந்த போது கூட 15 - 2௦ போட்டிகள் எனக்கு கிடைக்கும் என நினைக்கவில்லை" என்றார்.

மேலும், "அதிகபட்சம் மூன்று முதல் ஐந்து போட்டிகள் வரை கிடைக்கும். அதற்குள் நான் நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒருவருக்கு அதிகபட்சம் ஐந்து வாய்ப்புகள் கிடைக்கும். அதற்குள் அவர்கள் நிரூபிக்க வேண்டும்" என்றார் கோலி.

"அந்த அளவில் தான் நாங்கள் இருக்கிறோம். அணி நிர்வாகம் இந்த மனநிலையில் தான் உள்ளது எனும் நிலையில், தனி நபர்களும் (ஒவ்வொரு வீரரும்) அதே மனநிலையில் இருக்க வேண்டும்" என்றும் கறாராக கூறினார் கேப்டன் கோலி.

இளம் வீரர்கள் ரொம்ப பாவம்

இளம் வீரர்கள் ரொம்ப பாவம்

இந்த திட்டம் இளம் வீரர்களுக்கு தான் என தெரிகிறது. அவர்களை பற்றித் தான் கோலி கூறி உள்ளார். கோலியின் இந்த திட்டம் இன்றைய சூழ்நிலையில் சரியானது தான். அதே சமயம், திறமையான வீரர்களுக்கு கூடுதல் போட்டிகள் அளிக்கலாம்.

இளம் வீரர்கள் யார்?

இளம் வீரர்கள் யார்?

இந்திய டி20 அணியில் தற்போது இருக்கும் இளம் வீரர்கள் - தீபக் சாஹர், ராகுல் சாஹர், கலீல் அஹ்மது, நவ்தீப் சைனி, ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே. இவர்களுக்கு தான் கோலியின் திட்டம்.

ரிஷப் பண்ட் சிக்கல்

ரிஷப் பண்ட் சிக்கல்

ரிஷப் பண்ட் அணியின் நிரந்தர வீரர் போல காட்சி அளித்தாலும், அவரும் சரியாக ரன் குவிக்காமல் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சொதப்பினார். அவருக்கும் இந்த 5 போட்டிகள் திட்டம் பொருந்தும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, September 15, 2019, 21:28 [IST]
Other articles published on Sep 15, 2019
English summary
Captain Virat Kohli planned to give 5 matches to young players to prove themselves
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X