செம சர்ப்ரைஸ்.. பிரபல யூட்யூப் டான்சருடன் நிச்சயதார்த்தம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்!

மும்பை : இந்திய அணி கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் திடீரென தன் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

சாஹல் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஆவார். ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.

சமூக வலை தளமான டிக்டாக்கில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் பிரபல யூட்யூப் டான்சரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டதும் ஆச்சரியமான தகவலாக அமைந்தது.

CPL 2020 : இருந்த ஒரே ஃபிளைட்டையும் தவறவிட்ட வீரர்.. ஆள் இல்லாமல் தவிக்கும் டீம்

முதலில் செஸ்

முதலில் செஸ்

சாஹல் துவக்கத்தில் செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதன் பின் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த போது அஸ்வின், ஜடேஜா அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

சாஹல் - குல்தீப் யாதவ்

சாஹல் - குல்தீப் யாதவ்

அப்போது அவர்களுக்கு மாற்றாக சாஹல் - குல்தீப் யாதவ் ஜோடியாக இந்திய அணிக்குள் நுழைந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து "குல்ச்சா" என்றும் அழைக்கப்பட்டனர். இருவரும் விக்கெட் வேட்டை நடத்தி எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.

நம்பிக்கை

நம்பிக்கை

2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் சாஹல், குல்தீப் யாதவ் தனித் தனியாக இந்திய அணியில் இடம் பெற்று வந்தனர். சாஹல் சிறப்பாக பந்து வீசி இந்திய அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்ற வீரராக விளங்கி வருகிறார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

கொரோனா வைரஸ் பாதிப்பால் லாக்டவுனில் இருந்த போது அவர் தீவிரமாக டிக்டாக்கில் வீடியோக்கள் பகிர்ந்து வந்தார். டிக்டாக் ஆப் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதால் சில காலம் அமைதியாக இருந்தார். தற்போது திடீரென தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

தனாஸ்ரீ வர்மா

தனாஸ்ரீ வர்மா

தனஸ்ரீ வர்மா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அறிவித்துள்ளார். தனஸ்ரீ வர்மா மருத்துவர். ஆனால், அவருக்கு நடனத்தில் தான் ஈடுபாடு அதிகம். நடனம் சார்ந்த யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த சேனலை 15 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

ரசிகர்கள் ஆச்சரியம்

ரசிகர்கள் ஆச்சரியம்

பிரபல டிக்டாக் கிரிக்கெட் ஸ்டார், யூட்யூப் நடன கலைஞருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்கள் சாஹலுக்கு தங்கள் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், இந்திய அணி பீல்டிங் பயிற்சியாளர் ரவி ஸ்ரீதர், வாஷிங்க்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார் ஆகியோர் சாஹலுக்கு தங்கள் வாழ்த்துக்களை பரிமாறி உள்ளனர். தனஸ்ரீ வர்மாவின் ரசிகர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian leg spinner Yuzvendra Chahal announced engagement with Youtube dance star Dhanashree Verma. Crickters wishes Chahal. Fans are also sending their wishes.
Story first published: Saturday, August 8, 2020, 19:14 [IST]
Other articles published on Aug 8, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X