For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"50 விக்கெட் எடுத்திருக்கேன்.. ஏன் சான்ஸ் தர மாட்டேங்குறீங்க?" - சாஹல் வேதனை

மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் எனக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று வெளிப்படையாக கெஞ்சாத குறையாக வாய்ப்பு கேட்கும் நிலை சாஹலுக்கு.

2017... சாம்பியன்ஷிப் தொடரை இறுதிப் போட்டி. நேருக்கு நேர் மோதுவது இந்தியாவும் பாகிஸ்தானும். கிட்டத்தட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டி லெவலுக்கு எதிர்பார்க்கப்பட்ட போட்டி.

ஆனால், பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்ற, பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்ய, புதிதாக தேர்வு செய்யப்பட்ட ரவி சாஸ்திரி, இந்தியாவின் தேவை இனி 'ரிஸ்ட் ஸ்பின்னர்கள்' தான் என்கிறார். அந்த வார்த்தைகளின் எதிரொலியை உள்ளே வந்தவர்களே யுவேந்திர சாஹலும், குல்தீப் யாதவும்.

 விக்கெட் அறுவடை

விக்கெட் அறுவடை

'குல்-ச்சா' என்றும், 'ஸ்பின் - ட்வின்ஸ்' என்றும் கொண்டாடப்பட்டார்கள். 2017, 2018 என அடுத்தடுத்த சீசன்களில் பல போட்டிகளில் இணைந்து பல விக்கெட்டுகளை அறுவடை செய்தனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இவர்களது பவுலிங் திறனின் கன்சிஸ்டன்சி குறையத் தொடங்கியது. அதில், முதலில் அடி வாங்கியவர் குல்தீப் யாதவ். மிக மிக பொறுமையாக ஸ்பின் செய்வது தான் இவரது பிளஸ். அதுதான் பெரிய மைனஸும் கூட. அவரை வெளுக்கத் தொடங்கினர். அணியில் இடம் குறையத் தொடங்கியது.

ஆதங்கம்

ஆதங்கம்

ஆதேசமயம், சாஹல் ஓரளவு தாக்குப்பிடித்து இப்போதும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் பிடிக்கிறார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு, 'வருவனா?' என்கிறது. இதுகுறித்து அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது, 'எனக்கும் சான்ஸ் கொடுங்கய்யா என்று நேரடியாக கேட்காமல், சுற்றி வளைத்து தனது பேட்டியின் மூலம் கேட்டிருக்கிறார்.

 கிடைக்காதுன்னு தெரியும்

கிடைக்காதுன்னு தெரியும்

இதுகுறித்து அவர், "இங்கிலாந்து டூருக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்ட போது, எனக்கு அணியில் இடம் கிடைக்காது என்று தெரியும். என்னை சேர்ப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனினும், என்றாவது ஒருநாள் டெஸ்ட் அணி உடையை நான் உடுத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இந்தியாவுக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, சில ஸ்பின்னர்களுக்கு காயம் ஏற்பட்டதால். இதனால், எனது பெயர் பரிசீலிக்கப்படலாம் என்று எதிர்பார்த்தேன்.

 வாய்ப்பு கடினம்

வாய்ப்பு கடினம்

ஆனால், அதன்பிறகு அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் அதை சரியாக பயன்படுத்தினார். ஏற்கனவே அஷ்வின், ஜடேஜா டெஸ்ட் அணியில் உள்ளனர். 3 - 4 வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் கலக்கும் போது, உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். அஷ்வின் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியவர். ஜடேஜா 25 தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில், இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.

 50 விக்கெட்டுகள்

50 விக்கெட்டுகள்

நிச்சயமாக எனக்கும் வெள்ளை உடை உடுத்த ஆசை இருக்கிறது. உங்களை டெஸ்ட் போட்டியில் ஆட அழைத்தால், அதைவிட பெருமையான தருணம் இருக்க முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளில் 10 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளேன்" என்று பிசிசிஐ-க்கு ஒரு சிக்னலும் கொடுத்திருக்கிறார்.

Story first published: Saturday, May 22, 2021, 13:55 [IST]
Other articles published on May 22, 2021
English summary
Chahal expected a Test call for Eng tour of India - சாஹல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X