அவங்க சிறப்பா தயாராகிட்டாங்க... நாங்க கொஞ்சம் கஷ்டம்தான்... ஷிகர் தவான் ஆதங்கம்

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

Dhawan destroys punjab kings Attack | 92 Runs just 49 Balls | Oneindia Tamil

இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் இரு போட்டிகளில் வெற்றி பெற்று டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதுதான் தோனி.. கேப்டன்னா இப்படித்தான் பேசணும்.. தல சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ப்பா சூப்பர்!

கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அணியின் ஷிகர் தவான் 49 பந்துகளில் 92 ரன்களை அடித்திருந்தார்.

சென்னையில் முதல் போட்டி

சென்னையில் முதல் போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நாளைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்கென டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 3 போட்டிகளை சென்னையில் ஆடியுள்ள நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னையில் தனது முதல் போட்டியை நாளை விளையாடவுள்ளது.

2வது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

2வது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் மேலும் முன்னேறலாம்.

தயாரான மும்பை இந்தியன்ஸ்

தயாரான மும்பை இந்தியன்ஸ்

இந்நிலையில் சென்னையில் கடந்த 3 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அதன் பிட்ச்சிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக தயாராகி உள்ளதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை சென்னையில் முதல் போட்டியில் விளையாடவுள்ள டெல்லி அணி மனதளவில் சவாலை சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி அணியின் தேவை

டெல்லி அணியின் தேவை

கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோதிய ஷிகர் தவான் 49 பந்துகளில் 92 ரன்களை அடித்திருந்தார். இதன்மூலம் அந்த அணி சிறப்பான சேஸிங்கை செய்து எளிதான வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பாசிட்டிவ் மனநிலையுடன் டெல்லி அணி விளையாட வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மனதிற்குள் சொல்லும் ஷிகர்

மனதிற்குள் சொல்லும் ஷிகர்

மனதளவில் டெல்லி அணி சிறப்பாக தயாராகி அதற்கேற்ப திட்டமிட்டு நாளைய போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய மனதிற்குள் தான் எப்போதும் பிட்டாகவும் வலிமையாகவும் இருப்பதாக அடிக்கடி கூறிக் கொள்வதாகவும் அது தனது பயணத்தை எளிதாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
In my mind, I tell myself that I am very fit and strong and my journey will be very easy -Dhawan
Story first published: Monday, April 19, 2021, 19:44 [IST]
Other articles published on Apr 19, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X