For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேஎல் ராகுலுக்கு ஜிம்பாப்வே தொடர் ஏன் முக்கியம்? காத்திருக்கும் சவால்கள் என்ன? கடைசி வாய்ப்பு

பெங்களூரு: ஜிம்பாப்வே கூட இந்தியா விளையாட்றது எல்லாம் யார் பார்ப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் முடிவை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும்.

Recommended Video

IND vs ZIM Series-ல் ஏன் இல்லை? KL Rahul கொடுத்த Explanation

ஏன் என்றால், இந்த தொடர் தான் பல வீரர்களின் எதிர்காலத்தையும் ஏன், இந்தியாவின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க போகிறது.

ஆம், சீனியர்கள் இல்லாத போது எல்லாம், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யாராக வரப் போகிறார்கள் என்பதை ஜிம்பாப்வே தொடரை வைத்து தான் பிசிசிஐ தீர்மானிக்கும்.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

பிசிசிஐ வைக்கும் தேர்வு

பிசிசிஐ வைக்கும் தேர்வு

2013ஆம் ஆண்டு இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட 5 ஒருநாள் போட்டியில் விளையாடியது. அப்போது சீனியர்களுக்கு ஒய்வு வழங்கப்பட்ட நிலையில், விராட் கோலி தான் கேப்டன் பொறுப்பை எற்றார். அதில் இந்திய அணி 5க்கு0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கோலியும், கேப்டனுக்கு தாம் சரியான நபர் என்பதை களத்தில் நிரூபித்தார்.

ராகுல் கேப்டன்

ராகுல் கேப்டன்

தற்போதும், அதே போன்ற ஒரு சூழல் வருகிறது. சீனியர்கள் இல்லாத நிலையில், கேஎல் ராகுல் கேப்டனாக இந்திய அணிக்கு அவசரம் அவசரமாக தேர்வு செய்யப்பட்டு அனுப்பபடுகிறார். இதில் ராகுல் எப்படி செயல்படுகிறாரோ, அதை வைத்து தான் கேப்டனாக நியமிக்கலாமா, வேண்டாமா என்று பிசிசிஐ முடிவு எடுக்கும்.

அக்னி பரீட்சை

அக்னி பரீட்சை

ஏற்கனவே தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டனாக சொதப்பிய ராகுலுக்கு, தற்போது உடல் தகுதியிலும் பிரச்சினை எற்பட்டு விட்டது. பற்றாத குறைக்கு ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் கேப்டன் பொறுப்புக்கு தங்களது திறமையை நிரூபித்து காத்துள்ளனர். இதனால் ராகுலுக்கு ஜிம்பாப்வே தொடர் ஒரு அக்னி பரீட்சை போல் பார்க்கப்படுகிறது.

காத்திருக்கும் சவால்கள்

காத்திருக்கும் சவால்கள்

கேஎல் ராகுலுக்கு இருக்கும் முதல் சவாலே , ஜிம்பாப்வேக்கு எதிரான இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் ஓயிட் வாஷ் செய்ய வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. நடந்து முடிந்த தொடரில் வங்கதேசத்தை ஓட ஓட விரட்டி அடித்தது ஜிம்பாப்வே. எனவே ஜிம்பாப்வேவை சாதரணமாக நினைக்க முடியாது. அடுத்தது, ராகுல் தனது சொந்த பேட்டிங்கில் ரன் சேர்த்து, பேட்ஸ்மேனாக முதலில் அணியில் தனது இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மூன்றாவது நெருக்கடி நிலையில் கூலாக செயல்பட்டு, கேப்டனாக தனது தனி திறமையை நிரூபிக்க வேண்டும்.

Story first published: Friday, August 12, 2022, 12:40 [IST]
Other articles published on Aug 12, 2022
English summary
Challenges ahead of KL Rahul and Why Zimbabwe series is important கேஎல் ராகுலுக்கு ஜிம்பாப்வே தொடர் ஏன் முக்கியம்? காத்திருக்கும் சவால்கள் என்ன? கடைசி வாய்ப்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X