For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நல்லா கேட்டுக்கங்க, உங்களுக்குத்தான் "பிரஷர்" ஜாஸ்தி, எங்களுக்கு இல்லை.. பாக். பவுலிங் கோச்!

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியைப் பொறுத்தவரை இந்தியாவுக்குத்தான் அதிக நெருக்கடி உள்ளது. பாகிஸ்தானுக்கு இல்லை என்று அந்த நாட்டு அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளர் அஸார் மஹமூத் கூறியுள்ளார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும், வங்கதேசத்தை காலி செய்து விட்டு இந்தியாவும் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளன. போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இழப்பதற்கு எதுவும் இல்லை

இழப்பதற்கு எதுவும் இல்லை

இந்தப் போட்டி குறித்து அஸார் மஹமூத் கூறுகையில், எங்களிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை. உண்மையில் நெருக்கடி இந்தியாவுக்குத்தான்.

வரலாறு படைப்போம்

வரலாறு படைப்போம்

நாங்கள் நிச்சயம் வெல்வதற்காக மட்டுமே இங்கு வந்துள்ளோம். வரலாறு மாறும். மாற்றுவோம் என்று நம்புகிறேன். இது ஆஷஸ் (ஆஸ்திரேலியா -இங்கிலாந்து) மோதலை விட மிகப் பெரியது.

மிகப் பெரிய போட்டி

மிகப் பெரிய போட்டி

நிச்சயம் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மிகப் பெரியது. எந்த போட்டியையும் விட மிகப் பெரியது. இரு நாட்டு ரசிகர்களின் கிரிக்கெட் மீதான மோகத்தின் உச்சத்தை இதில் பார்க்கலாம் என்றார் அஸார்.

2007க்குப் பிறகு

2007க்குப் பிறகு

இரு நாடுகளும் ஐசிசி இறுதிப் போட்டியில் மோதுவது 2007ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்ட மன நிலையில் உள்ளனர்.

கோஹ்லி கலக்குவார்

கோஹ்லி கலக்குவார்

2007ல் எப்படி டோணி பாகிஸ்தானை வீழ்த்தி டுவென்டி 20 உலகக்கோப்பையை கொண்டு வந்தாரோ அதேபோல கோஹ்லியும் இப்போது சாம்பியன்ஸ் டிராபியுடன் ஊர் திரும்புவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Saturday, June 17, 2017, 12:18 [IST]
Other articles published on Jun 17, 2017
English summary
Pakistan's bowling coach Azhar Mahmood feels India will be under more pressure in the ICC Champions Trophy 2017 final tomorrow (June 18) here at The Oval.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X