For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிமுக கலாட்டாக்களை விடுங்க பாஸ், "தேசபக்தர்" மல்லையா "தில்" பேச்சைப் பாருங்க!

லண்டன்: இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு வருவேன், பார்த்து ரசிப்பேன், இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துவேன் என்று படு தில்லாக கூறியுள்ளார் இந்தியாவை விட்டு தப்பி ஓடி இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையா.

மது ஆலை அதிபரான விஜய மல்லையா கிட்டத்தட்ட 9000 கோடி அளவுக்கு இந்திய வங்கிகளில் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடி விட்டார். அவரை ஹாயாக தப்பிக்க விட்டு விட்ட பின்னர் இப்போது அவரைப் பிடித்துக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசுத் தரப்பு கூறியுள்ளது.

ஆனால் விஜய் மல்லையா படு ஜாலியாக இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். நமது நாட்டில் விவசாயிகள் சின்னக் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் கூட கழுத்தை நெரிக்கும் வங்கிகள், விஜய் மல்லையா விவகாரத்தில் வாயை மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்கின்றன.

கிரிக்கெட் பார்த்து ஜாலி

கிரிக்கெட் பார்த்து ஜாலி

விஜய் மல்லையா தற்போது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை ஜாலியாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியை அவர் விஐபி காலரியில் அமர்ந்து பார்த்தது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

கவாஸ்கருடன் சந்திப்பு

கவாஸ்கருடன் சந்திப்பு

மேலும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரையும் அவர் சந்தித்துப் பேசினர். பிர்மிங்காம் நகரில் இருவரும் நெருக்கமாக நின்றபடி பேசிக் கொண்டிருந்த புகைப்படம் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

அப்படித்தான் வருவேன்

அப்படித்தான் வருவேன்

இதுகுறித்து மல்லையா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் இந்தியா ஆடும் எல்லாப் போட்டிகளுக்கும் கண்டிப்பாக வருவேன். இந்தியாவை உற்சாகப்படுத்துவேன் என்று அடித்துக் கூறியுள்ளார் மல்லையா.

சூப்பரப்பு

சூப்பரப்பு

மல்லையா தெளிவாகத்தான் இருக்கிறார். நமது அதிகாரிகள்தான் மல்லையாவை "நாடு கடத்தி"க் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து "முடுக்கி" விட்டுக் கொண்டே உள்ளனர்.

கொண்டு வந்திருவாங்க நம்புவோம்.. அதுவரைக்கும் கிரிக்கெட் பார்ப்போம்.

Story first published: Tuesday, June 6, 2017, 8:32 [IST]
Other articles published on Jun 6, 2017
English summary
I intend to attend all games to cheer India was the reaction by liquor baron, Vijay Mallya who attended the India-Pakistan game played on Sunday. It was wide and sensational coverage by the media on my attendance at the game, Mallya said. Mallya who is mired in controversy over loan default cases had left India for the UK last year.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X