For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பல வரலாறுகளை கண்ட சென்னை சேப்பாக்கம் மைதானம் இடிக்கப்பட்டது..!!

சென்னை; இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத மைதானம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம்..

Recommended Video

IPL 2022-க்கு புதுசா தயாராகும் Chennai Chepauk Stadium

இந்த மைதனம் பல சாதனைகள் வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்ற முதல் வெற்றியும் இங்கு தான்.

சென்னை மக்களோடு கலந்த இந்த சேப்பாக்கம்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாய் வீடாக இருந்தது.

புதுசா மாறுது சென்னை சேப்பாக்கம் மைதானம்..!! புது ஸ்டேடியத்தில் தான் இனி ஐ.பி.எல்.புதுசா மாறுது சென்னை சேப்பாக்கம் மைதானம்..!! புது ஸ்டேடியத்தில் தான் இனி ஐ.பி.எல்.

அழகான மைதானம்

அழகான மைதானம்

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு லண்டனை சேர்ந்த கட்டுமான நிறுவனம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது. அடிலெய்ட் ஓவல் மற்றும் லண்டன் லார்ட்ஸ் மைதான அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச தரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தை பார்க்கும் போது இது சென்னையா இல்லை வெளிநாடா என்று தோன்றும் அளவுக்கு இந்த மைதானம் இருந்தது.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

ஆனால், இந்த மைதானத்தில் உள்ள மெட்ராஸ் கிரிக்கெட் அகாடமி கட்டடம் பாரம்பரியமிக்க புரதான சின்னம் என்று அறிவிக்கப்பட்டதால், அதனை இடித்து கட்ட அனுமதி வழங்கப்படவில்லை.இது குறித்து பல முறை அரசுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால் 10 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

இடிக்கப்பட்டது

இடிக்கப்பட்டது

மைதானம் முழுவதும் புதியதாக இருக்க, ஒரு பகுதி மட்டும் பழைய தோற்றத்தில் இருந்தது ரசிகர்களுக்கு உறுத்தலாகவே இருந்தது. இந்த நிலையில், இதனை மாற்றி அமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் அனுமதி தந்தது. இதனையடுத்து அண்ணா பெவிலியன் பகுதியை இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது . இதனை அவ்வழியாக பார்த்து செல்லும் கிரிக்கெட் ரசிகர்கள், பல வரலாற்று போட்டிகளை அமர்ந்து கண்டுகளித்த இடம் இடிக்கப்படுகிறதே என வருந்தினாலும், புதிய அமைப்பு வருவதை எதிர்நோக்கி மகிழ்ச்சியும் அடைகின்றனர்.

ஐ.பி.எல் 2022

ஐ.பி.எல் 2022

ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு தொடருக்குள் மைதானத்தை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 4 மாதத்திற்குள் இந்த பணியை முடிக்க தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளதால் இரவு பகலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் புத்தம் புதிய தோற்றத்தில் காணப்படும் மைதானத்தில் சி.எஸ்.கே. களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, December 7, 2021, 12:30 [IST]
Other articles published on Dec 7, 2021
English summary
Renovated Chennai chepauk stadium is all set to be ready for IPL2022. Chennai corporation gave Permission to renovate Madras cricket academy. Construction Work is happening all around the clock/
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X